தீபாவளி அன்று வெளியாகிறது தினேஷ் – அதிதி மேனன் நடித்துள்ள களவாணி மாப்பிள்ளை

2

நம்ம ஊரு பூவாத்தா, ராக்காயி கோயில், பெரிய கவுண்டர் பொண்ணு, கட்டபொம்மன், நாடோடி மன்னன், மாப்பிள்ளை கவுண்டர் உட்பட 16 சூப்பர் ஹிட் படங்களை தயாரித்த ராஜபுஷ்பா பிக்சர்ஸ் பட நிறுவனம் காந்திமணிவாசகம் இயக்கத்தில் “ களவாணி மாப்பிள்ளை “ படத்தை தயாரித்துள்ளது.

தினேஷ் நாயகனாக நடித்துள்ளார். கதாநாயகியாக அதிதி மேனன் நடித்துள்ளார். மற்றும் ஆனந்த்ராஜ், தேவயாணி, ரேணுகா, மனோபாலா, மகாநதி சங்கர், மொட்டை ராஜேந்திரன், முனீஸ்காந்த், ஜோதி, லல்லு, கிரேன் மனோகர், நாஞ்சில் விஜயன் ஆகியோர் நடித்துள்ளனர்.

ரசிகர்கள் குடும்பத்தோடு பார்த்து ரசிக்கும்படியான கலக்கல் காமெடி. படமாக உருவாக்கி உள்ளோம். படம் வருகிற நவம்பர் 6 ம் தேதி தீபாவளி திருநாள் அன்று உலகம் முழுவதும் வெளியாகிறது.

Previous articleRajavukku Raja Tamil Movie Official Teaser
Next articleஇசைஞானி இளையராஜா காப்புரிமை வழக்கு – விளக்கம்