சண்டக்கோழி மாஸ் கலந்த குடும்ப படமாக இருக்கும் – வரலட்சுமி சரத்குமார்

சண்டக்கோழி2 திரைப்படத்தில் வேலைப்பார்க்கும் போது நிறைய சந்தோஷமான தருணங்கள் இருந்தது. லிங்குசாமி சார் மிகவும் கூலான மனிதர். சண்டக்கோழி2-வில் நான் கம்போர்ட் சோணிலிருந்து வெளியேவந்து நான் நடித்துள்ளேன். நாங்கள் திண்டுக்கல் , காரைக்குடி போன்ற பகுதிகளில் தொடர்ந்து படப்பிடிப்பு நடத்தி வந்தோம். அங்கே நிறைய தொடர்ச்சியாக நிறைய அழகான வீடுகள் இருக்கும். படத்தின் பல முக்கியமான காட்சிகளை அங்கே தான் எடுத்தோம். கிளைமாக்ஸ் காட்சி சிறப்பாக வந்துள்ளது. கண்டிப்பாக ரசிகர்களுக்கு அது விருந்தாக இருக்கும். படத்தில் நான் நிறைய சவாலான காட்சிகளில் நடித்துள்ளேன். வெயிலில் தொடர்ந்து படப்பிடிப்பு நடந்ததால் எனக்கு முகம் மற்றும் உடலில் டேன் ஏற்பட்டது. இப்படத்தில் ரசிகர்கள் விரும்பும் அனைத்தும் உள்ளது என்றார் வரலட்சுமி.

விஷால் நடித்து தயாரித்திருக்கும் சண்டக்கோழி 2 வருகிற அக்டோபர் மாதம் 18 ஆம் தேதி வெளியாகவுள்ளது. இதில் கீர்த்தி சுரேஷ் , வரலட்சுமி சரத்குமார் , ராஜ் கிரண் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். யுவன் ஷங்கர் ராஜா இசையில் பாடல்கள் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றுள்ளது.

Previous articleThe Equalizer 2 ( 2018 ) Movie Review
Next articleVada Chennai Press Meet Stills