சாருஹாசன், ஜனகராஜ், சரோஜா, ஆனந்த் பாண்டி நடிப்பில் “தாதா 87” படத்தை விஜய் ஸ்ரீ ஜி இயக்கியுள்ளார்.
“தாதா 87” படத்தின் பாடல்களும், முன்னோட்டமும் நல்ல வரவேற்பு பெற்ற நிலையில் விரைவில் இப்படம் வெளியாகவுள்ளது.
தற்போது AFF நிறுவனம் தயாரிப்பில் இயக்குனர் விஜய் ஸ்ரீ ஜி நடிகர் அம்சன் நடிக்கும் புதிய படமொன்றை இயக்கவுள்ளார். தல அஜித்தின் தீவிர ரசிகராகவும், கல்லூரியின் சூப்பர் சினியராகவும் அம்சன் நடிக்கின்றார்.
மற்ற நடிகர், நடிகை மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களின் பெயர்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இப்படத்தின் முதல் பார்வை போஸ்டர் வரும் 18ம் தேதி வெளியிடப்படும் என்று தயாரிப்பு தரப்பு கூறியுள்ளது.