தேசிய விருது வென்ற நாயகன் தனுஷ் மற்றும் தேசிய விருது பெற்ற இயக்குனர் வெற்றிமாறன் ஆகியோர் கூட்டனில் உருவாகியுள்ள படம்
“வட சென்னை ” . கடந்த 23 .9 .18 ஞாயிறு அன்று இப்படத்தின் பாடல்கள் வெளியானது.மேலும் பாடல்களுக்கு சிறந்த விமர்சனங்களும் வாழ்த்துக்களும் குவிந்த வண்ணம் உள்ளது.
இத்திரைப்படத்திற்கு காலா ,கபாலி படங்களுக்கு இசையமைத்த சந்தோஷ் நாராயணன் இசைமைத்துள்ளார்.இது இவருக்கு 25 வது படம் தனுஷ் இன் வுண்டர்பார் பிலிம்ஸ் இந்த படத்தினை தயாரித்துள்ளது.லைக்கா ப்ரொடொக்சன்ஸ் அக்டோபர் 17 ஆம் தேதி முதல் உலகெங்கும் ரிலீஸ் செய்கிறது.
பொல்லாதவன் ,ஆடுகளம் ஆகிய மாபெரும் வெற்றி படங்களை தந்த தனுஷ் -வெற்றிமாறன் கூட்டணி இந்த படத்திற்காக மூன்றாவது முறையாக இணைந்துள்ளனர்.இந்த கூட்டணியில் சமுத்திரக்கனி, அமீர், டேனியல் பாலாஜி, ஆண்ட்ரியா, ஐஸ்வர்யா ராஜேஷ், கிஷோர், கருணாஸ், பவன் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் இணைந்து நடித்துள்ளனர்.
தற்போது சீனாவில் நடக்கும் சர்வதேச திரைப்பட விழாவில் வடசென்னை திரையிடப்பட இருக்கிறது. அடுத்த மாதம் 11ந் தேதி முதல் 20ந் தேதி வரை பிங்யாவோ சர்வதேச திரைப்பட விழா நடக்க இருக்கிறது.இதில் 3வது நாளில் வடசென்னை திரைப்படம் திரையிடப்படுகிறது. இந்த திரைப்பட விழாவில் திரையிடப்படும் முதல் தமிழ் படம் வடசென்னை என்பது குறிப்பிடத்தக்கது.