நெல்சன் வெங்கடேசன் இயக்கத்தில் மான்ஸ்டர்

0

மாயா , மாநகரம் போன்ற தரமான வெற்றி படங்களை தயாரித்த பொடென்ஷியல் ஸ்டுடியோஸ் SJ சூர்யாவை நடிப்பில் , நெல்சன் வெங்கடேசன் இயக்கத்தில் “ மான்ஸ்டர் ” திரைப்படத்தை தயாரிக்கிறது. இது பொடென்ஷியல் ஸ்டுடியோஸ் தயாரிக்கும் மூன்றாவது திரைப்படம். SJ சூர்யா கதாநாயகனாக நடிக்கும் இப்படத்தில் ப்ரியா பவனி ஷங்கர் கதாநாயகியாக நடிக்கிறார். “ ஒரு நாள் கூத்து “ திரைப்படத்தை இயக்கிய நெல்சன் வெங்கடேசன் இப்படத்தை இயக்கியுள்ளார்.

மான்ஸ்டர் குழந்தைகளுக்கான திரைப்படம் இதில் SJ சூர்யா இதுவரை நடித்திராத புதுமையான கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
படத்துக்கு இசை ஜஸ்டின் பிரபாகரன் , ஒளிப்பதிவு கோகுல் பினாய் , படத்தொகுப்பு சாபு ஜோசப் , கலை ஷங்கர் சிவா.

படத்தின் போஸ்ட் புரொடெக்ஷன் வேலைகள் வேகமாக நடைபெற்று வருகிறது. இசை வெளியீடு மற்றும் பட ரிலீஸ் தேதி பற்றிய அறிவிப்பு விரைவில் வெளியாகும்.

 

Previous articleபாகுபலி வில்லனுடன் மோதிய பிரபுதேவா
Next articleVenom Releasing in English, Tamil & Telugu on October 5th