அரவிந்த்சாமி – ரெஜினா நடிக்கும் “ கள்ளபார்ட் “ ராஜபாண்டி இயக்குகிறார்

1

விக்ரம் நடித்து வெற்றி பெற்ற “ ஸ்கெட்ச் “ படத்தை தயாரித்த மூவிங் பிரேம் பட நிறுவனம் சார்பாக எஸ்.பார்த்தி, எஸ்.எஸ்.வாசன் இருவரும் தற்போது அரவிந்த்சாமி நாயகனாக நடிக்கும் “ கள்ளபார்ட் “ படத்தை மிக பிரமாண்டமாக தயாரிகிறார்கள்.

என்னமோ நடக்குது, அச்சமின்றி போன்ற படங்களை இயக்கிய ராஜபாண்டி இந்த படத்தை இயக்குகிறார்.

வித்தியாசமான கதையம்சம் கொண்ட இந்தப் படத்தில் நாயகியாக ரெஜினா நடிக்கிறார். முக்கிய வேடத்தில் ஆனந்த்ராஜ் நடிக்கிறார். மற்ற நட்சத்திரங்கள் தேர்வு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

வசனம் – ராதாகிருஷ்ணன்

ஒளிப்பதிவு – அரவிந்த்கிருஷ்ணா

இசை – நிவாஸ் கே.பிரசன்னா

கலை – மாயபாண்டி

எடிட்டிங் – இளையராஜா

ஸ்டன்ட் – மிராக்கில் மைக்கேல்

தயாரிப்பு மேற்பார்வை – வி.ராமச்சந்திரன்

தயாரிப்பு – எஸ்.பார்த்தி, எஸ்.எஸ்.வாசன்.

திரைக்கதை எழுதி இயக்குகிறார் – ராஜபாண்டி.

இந்த படத்திற்காக ஏ.வி.எம் ஸ்டுடியோவில் அரங்குகள் அமைக்கப்பட்டு இன்று பூஜையுடன் படப்பிடிப்பு துவங்கியது. தொடர்ந்து முப்பது நாட்கள் படப்பிடிப்பு சென்னையில் நடைபெற உள்ளது.

இந்த விழாவில் பா.ரங்கநாதன்.எம்.எல்.ஏ , தொழிலதிபர்கள் எஸ்.செல்வம், சிவசங்கர், பொன்வண்ணன், சரண்யா பொன்வண்ணன், இயக்குனர்கள் விஜய் சந்தர், ஜெயபிரகாஷ், பெப்ஸி தலைவர் ஆர்.கே.செல்வமணி, குட்டிபத்மினி ஆகியோர் கலந்துகொண்டனர்.

Previous articleNayagam Teaser
Next articleவிக்ரம்பிரபு மிகுந்த எதிர்பார்ப்புடன் நடித்து முடித்திருக்கும் படம் துப்பாக்கி முனை