கதிரவன் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் உருவாகிவரும் திரைப்படம் அவளுக்கென்ன அழகியமுகம்,பாடல்கள் கவியரசு வைரமுத்து எழுதியுள்ளார் A.கேசவன் இயக்கும் இந்த திரைப்படத்தின் பாடல் காட்சிகளை கொடைக்கானல் மலை உச்சியில் படமாகிக்கொண்டு இருந்தனர்.. மிக உயரமான இடத்தில் வைத்து பாடலை நடன இயக்குனர் ஷங்கர் படம்பிடித்து க்கொண்டு இருந்த வேளையில் உயரமான இடத்தில் நிற்கவைத்தால்
பயத்தில் இருந்த நடிகை அனுபமா பிரகாஷ்.. மாலை படப்பிடிப்பு தளத்தில் இருந்து தனது அறை வரை சென்று வருவதாக சொல்லிவிட்டு சென்றவர்.. யாரிடமும் சொல்லாமல் மதுரையில் இருந்து விமானம் மூலம் தனது சொந்த ஊர் டெல்லிக்கு விட்டார்..இந்த தகவல் தெரியாமல் படப்பிடிப்பு தளத்தில் காத்திருந்த குழுவினர்கள்..அவரை கொடைக்கானல் முழுவதும் தேடினர்..பின்பு தான் தெரிந்தது அவர் டெல்லி சென்றது, பின்னர் உடனே தயாரிப்பாளர் டெல்லிக்கு சென்று சமாதானம் செய்து மீண்டும் படபிடிப்பிற்கு அழைத்து வந்தார்…”அவளுக்கென்ன அழகியமுகம்” திரைப்படம் வரும் செப்டம்பர் மாதம்7தேதி வெளியாகிறது.