நடிகர் வருண் தவான் சுய் தாகா படத்தில் பெற்ற அனுபவத்தையும் , தையல் நுட்பத்தையும் வைத்து ஒரு சட்டையை தைக்கிறார்.அதனை அவருடைய அப்பாவின் 68 வது பிறந்தநாளுக்கு பரிசாக வழங்கினார்.
இந்த படத்தில் வருண் தையல் வேலைபாடு செய்யும் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.அதனால் இந்த படத்தின் மூலம் கைத்தறி கலையையும் , தையல் வேலைப்பாடு நுட்பங்களையும் சிறப்பாக கற்றுக்கொண்டார்.இந்த நுட்பத்தை பயன்படுத்தி தன் தந்தை டேவிட் வருண் அவர்களுக்கு பிறந்தநாள் பரிசாக ஒரு சட்டையை தைக்க முடிவு செய்தார்.பரிசளித்து தன் தந்தையை ஆச்சர்யத்தில் ஆழ்த்த முடுவு செய்தார்.
ஒரு அருமையான வண்ணமுடைய கோடைகால துணியை தேர்வு செய்து தன் கைத்தறி கலையை பயன்படுத்தி நீண்ட நாளாக நேரம் எடுத்து சிறப்பாக ஒரு சட்டையை தைத்து முடித்தார்.
இதனை தன் தந்தைக்கு பிறந்தநாள் பரிசாக அளித்தார்.
இதை கண்ட டேவிட் மிகவும் பிரமாதமாக இருக்கிறது என மகிழ்ச்சியடைந்தார்.தன் மகன் இப்படி தானாகவே அருமையான சட்டையை தைப்பார் என நினைக்கவில்லை எனவும் ஆச்சர்யத்துடன் தெரிவித்துள்ளார்.
வருண் தவானும் ,அவரது அண்ணன் ரோஹித் என்பவரும் அவர்களது தந்தையின் பிறந்தநாளை சிறப்பாக கொண்டாட மும்பையில் உள்ள ஹோட்டையிலில் பிறந்தநாள் விழா கொண்டாட முடிவு செய்தனர்.மேலும் சிறப்பான இரவு உணவும் ஏற்பாடு செய்தனர்.