“த்ரிஷா இல்லன்னா நயன்தாரா”வெற்றி படத்தை தயாரித்த கேமியோ பிலிம்ஸ் சி ஜே ஜெயக்குமார் அடுத்து தயாரிக்கும் “இமைக்கா நொடிகள்” படம் அறிவிக்க பட்ட நாளில் இருந்தே மிகுந்த எதிர்பார்ப்பு ஏற்படுத்தி இருக்கிறது. அதர்வா =ராஷி கண்ணா ஜோடியாக நடிக்க , அவர்களுடன் படத்தின் மைய புள்ளியாக நடிக்கிறார் நயன்தாரா.பிரபல ஹிந்தி திரை உலகின் இயக்குனர் அனுராக் காஷ்யப் வில்லனாக நடிக்கிறார். அஜய் ஞான முத்து இயக்கத்தி, ஹிப் ஹாப் ஆதி இசை அமைக்க, ஆர் டி ராஜசேகர் ஒளிப்பதிவில், பட்டுக்கோட்டை பிரபாகர் அவர்களின் கூர்மையான வசனத்தில் உருவாகும் இந்த படத்தில் இடம் பெறும் “விளம்பர இடைவெளி ” என்ற பாடல் இளமை ததும்பும் காட்சிகளால், மனதை மயக்கும் இசையால், அருமையான பாடல் வர்களால், இணைய தளத்தில் மிகவும் பிரபலமானது. ஒரு முழு நேர ஆக்ஷன் கதாநாயகனாக அதர்வா மிளிரும் இந்த படம் அவருக்கு திருப்பு முனையாக இருக்கும் என திரை உலகம் கணிக்கின்றது. ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் போல படத்தின் வெற்றிக்கு கட்டியம் கூறும் பாடல் தான் “விளம்பர இடைவெளி” பாடல்.
.
ரசிகர்களை சீட்டின் நுனிக்கு வர வைக்கும் ஒரு crime திரில்லர் தான் “இமைக்கா நொடிகள்”, காட்சிக்கு காட்சி கண் இமைக்காமல் அவர்கள் படம் பார்ப்பார்கள் என்பதற்கு நான் உத்தரவாதம் என்கிறார் தயாரிப்பாளர் சி ஜே ஜெயக்குமார்.