தடைகளை கடந்து நாளை முதல் தமிழகமெங்கும் ரிலீசாகும் – “பிரம்ம புத்ரா”

உறவுகளையும், காதலையும் தாண்டி சமூகத்தில் பெரிதும் மதிக்கப்படுவது, போற்றப்படுவது “நட்பு”. காதலை… விரும்பாதவர்கள் இருப்பார்கள் ஆனால், நட்பை விரும்பாதவர்கள் இருக்க முடியாது. அப்படிப்பட்ட நட்பை மையமாக வைத்து உருவான படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வெற்றிப்பெற்றுள்ளன. அந்த வகையில் நட்பை மையமாக வைத்து உருவாகியிருக்கும் படம் கோல்டன் மீடியா நிறுவனும் தயாரிக்கும்
“பிரம்ம புத்ரா”

தினேஷ் பாபு, முரளி இருவரும் நண்பர்கள். இரு நண்பர்களும் நேசித்த வேலையில் சேர்ந்து நல்லா சம்பாதிக்கனும், விரும்பிய பெண்ணை கல்யாணம் பண்ணி மன நிறைவா மகிழ்ச்சிய வாழனும்கிற கனவோடு விரும்பிய வேலையை தேடுகிறார்கள். வேலை தேடலுக்கிடையில் காதலும் வருகிறது. அதில் முரளியின் காதலில் பிரச்சினை வர, அந்தப் பிரச்சினையால் முரளி கோமா நிலைக்கு தள்ளப்படுகிறார். முரளியின் கோம நிலைக்கு செல்ல காரணமானவரை திணேஷ் கொலை செய்கிறார். இவர்கள் ஆசைப்பட்ட மாதிரி வேலையும், காதலியும் கிடைத்ததா இல்லையா என்பதை அழகாக திரைக்கதை அமைத்து வசனம் எழுதி இயக்கியுள்ளார் இயக்குனர் தாமஸ்.

படத்தில் டாக்டர்.தினேஷ் பாபு – உதயதாரா, முரளி – அக்ஷதா மற்றும் கங்கேஷ், டெல்லி கணேஷ், பாண்டு, வையாபுரி, போண்டமணி, திடீர் கண்ணையா ஆகியோர் நடித்துள்ளனர்.

படத்தை சென்சார் அதிகாரிகள் பார்த்து நெழ்ச்சியில் கண்கலங்கி இயக்குனர் மற்றும் தயாரிப்பாளரை பாராட்டி படத்திற்கு U சான்றிதழ் கொடுத்துள்ளனர்.

இப்படத்தை கோல்டன் மீடியா நிறுவனும் சார்பில் டாக்டர்.தினேஷ் பாபு மற்றும் டாக்டர் K.R.Raja தயாரித்துள்ளார்கள்.