இன்று முன்னனி இயக்குனர்களாக விளங்கும் பல இயக்குனர்களை தனது தயாரிப்பு நிறுவனம் திருக்குமரன் எண்டர்டெயின்மெண்ட் மூலமாக அறிமுகபடுத்தி தமிழ் சினிமாவில் புதிய அத்தியாத்தை உருவாக்கியவர் தயாரிப்பாளர் சீ.வி.குமார்.
வெற்றி தயாரிப்பாளராக தன்னை நிருபித்து காட்டிய சீ.வீ.குமார் “மாயவன்” வெற்றி படம் மூலமாக இயக்குனராகவும் தன்னை முன்நிறுத்தியவர். தற்போது, திருக்குமரன் எண்டர்டெயின்மெண்ட் தயாரிப்பில் உருவாகும் “கேங்க்ஸ் ஆப் மெட்ராஸ்” எனும் புதிய படத்தை இயக்குகிறார்.
வேலு பிரபாகரன், டேனியல் பாலாஜி, ஆடுகளம் நரேன், அசோக் குமார், பகவதி பெருமாள், இயக்குனர் ராமதாஸ், பிரயங்கா ருத் (கதாநாயகி) ஆகியோர் நடிக்கின்றனர்.
சென்னையில் துவங்கிய “கேங்க்ஸ் ஆப் மெட்ராஸ்” படத்தின் படப்பிடிப்பு தற்போது துரிதமாக நடைபெற்று வருகிறது.
தொழில்நுட்ப கலைஞர்கள்
தயாரிப்பு – திருக்குமரன் எண்டர்டெயின்மெண்ட்
எழுத்து, இயக்கம் – சீ.வி.குமார்
ஒளிப்பதிவு – கார்த்திக் தில்லை
இசை – ஹரி டவுசியா
படத்தொகுப்பு – ராட் கிரிஷ்
கலை இயக்கம் – விஜய் ஆதிநாதன்
சண்டைப்பயிற்சி – ஹரி தினேஷ்
மக்கள் தொடர்பு – நிகில்
டிசைனர் – கண்ணதாசன்