வழக்கமாக ஒரு பழமொழியை எல்லோரும் சொல்வார்கள்.. “உள்ளூர் மாடு சந்தையில் விலை போகாது ” என்று…..
அப்படித்தான் தமிழ் நாட்டில் தமிழ்ப்படங்களில் தமிழ் தெரியாத வில்லன்கள்…
அப்படியும் சிலர் தப்பித் தவறி ஜெயித்து விடுகிறார்கள்…
அப்படி ஜெயித்த ஒருவர் தான் மதுராஜ்..
இவரின் நெருங்கிய நண்பர் தான் இயக்குனர் வி.இசட்.துரை…
மதுராஜ் மெடிக்கல் துறையில் பிசியாக இருந்தவரை இயக்குனர் துரை இவரை கை பிடித்து இழுத்து வந்து நேபாளி படத்தில் லைன் புரடியூசர் என்கிற அந்தஸ்தை ஏற்படுத்தி தந்திருக்கிறார்..
அதற்கு பிறகு இவருக்கு ஏற்பட்ட நட்பின் காரணமாக நட்டிகுமார் இயக்கிய “எவனவன்” படத்தில் துப்பறியும் போலீஸ் வேடம்… விஜய்சேதுபதி நடித்து பன்னீர்செல்வம். இயக்கிய கருப்பன் படத்திலும் நான் நடித்திருக்கிறேன்
அடுத்து அங்காடி தெரு மகேஷ் நடிக்க விஜய்மோகன் இயக்கும் படத்தில் கான்ஸ்டபிள் இன்ஸ்பெக்டர், போலிஸ் இன்வஸ்டிகேசன் ஆபிசர் என மூன்று பரிமாண காரக்டர்.. மூன்று கால கட்ட கதாபாத்திரம் எனக்கு. சித்தார்த் நடிக்க உள்ள ஒரு படத்தில் முக்கிய காரக்டர் ஒன்றை எனக்கு கொடுத்திருக்கிறார் இயக்குனர் சாய்சேகர்..
ரம்மி பட இயக்குனர் பாலகிருஷ்ணன் இயக்கும் கதாயுதம் படத்தில் லீடிங் லாயர் வேடம் எனக்கு..
எனக்கு ஒரு ஆசை …
ரகுவரன் மாதிரி எந்த காரக்டர் கொடுத்தாலும் அப்படியே பொருந்திப் போகிறார் இந்த மதுராஜ் என்கிற பேர் எடுக்கணும்…
உள்ளூர் மாடுக்கு விலை இருக்குங்கிறத நிரூபிக்கணும் என்கிறார் மதுராஜ்
ஒரு நல்ல தமிழ் பேச தெரிந்த நடிகரை வரவேற்போம்..
வாழ வைப்போமே..,.