வருமானவரித்துறை மூமுதல் ஆணையர், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி,ஸ்ரீ சுஷில்குமார், IRS சென்னை, அவர்களின் அறிவுரையின்படி, ஸ்ரீ யக்ஷ்வன்ட் யு சவான், IRS வருமானவரித்துறை முதன்மை ஆணையர்-9 சென்னை, அவர்களின் தலைமையில், வருமானவரி குறித்த விளக்கவுரை கருத்தரங்கம், இன்று, 28-06-2018 காலை 10:30 மணிக்கு விஜய் பார்க் ஹோட்டல், மாதவரம் மேம்பாலம் அருகில், மாதவரம், சென்னையில், நடைபெற்றது.
விளக்கவுரைக் கருத்தரங்கில், பல்வேறு அதிகாரிகள், கலந்துகொண்டு, கீழ்க்கண்ட விஷயங்கள் குறித்து பேசினர்.
1. நிதியாண்டின் துவக்கத்திலே, வருமானவரி செலுத்துபவர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த:
a. முறையான கணக்கினை எவ்வாறு கடைப்பிடிப்பது.
b. முறையான அட்வான்ஸ் டேக்ஸை, எப்படி தீர்மானிப்பது, அவற்றை, தகுந்த காலத்தில், மத்திய அரசின் கணக்கில் எப்படி செலுத்துவது.
c. TDS,TCS எவ்வாறு செய்வது, நேரத்தில் எப்படி செலுத்துவது, e-TDS (காலாண்டு)படிவங்களை, காலத்தே எப்படி அப்லோட் செய்வது.
2. தனிநபர் மற்றும் இதர வரிசெலுத்துபவர்கள், ஏன் வருமானவரிப்படிவங்களை, காலத்தே தாக்கல் செய்யவேண்டும் என்ற அறிவுரைப்பது.
3. வரிசெலுத்துவோர், எப்படி இணையத்தில் வரி செலுத்துவது மற்றும் இணையத்தில், வருமானவரித்துறை நடவடிக்கைகளை எதிர்கொள்ளும் நம்பிக்கையை, ஏற்படுத்துவது.
4. வருமானவரி செலுத்துவோர்களை, நட்போடு அணுக காத்திருக்கும், வருமானவரித்துறையின் அடிப்படையான எண்ணத்தை புரியவைத்து, அவர்களின் குறைகளை தீர்க்கவே, இத்துறை செயல்படுகிறது என்பதை தகுந்த முறையில் அறிவிப்பது.
ஜவுளி, கட்டுமானப்பணி செய்வோர், இரும்பு மற்றும் எஃகு சார்ந்த தொழில்முனைவோர், ஆட்டோமொபைல் சார்ந்தவர், உட்பட பல்வேறு தொழில்புரியும் வருமானவரி செலுத்தும் ஏராளமானவர்கள் கலந்துகொண்டு பயனைடைந்தனர்.
திரு. ராஜாராம் மொரே, FCA, திரு.J.K. ரெட்டி, FCA உட்பட்ட பல்வேறு பட்டயக்கணக்காளர்களும், விழாவில் கலந்துகொண்டு, வருமானவரித்துறையினரின், புதிய முயற்சியை நெஞ்சார பாராட்டினர்.
கூடுதல் ஆணையர் ஸ்ரீ ராதாகிருஷ்ணன், IRS, வரவேற்புரை நிகழ்த்தினார். ஸ்ரீமதி. யமுனா, IRS இணை ஆணையர், நன்றி பாராட்டினார்.