2003 ஆம் ஆண்டு கொரியாவில் வெளியான ஓல்ட் பாய் திரைப்படத்தின் கதையின் ஒன்லைன் 15 வருடம் தனிமை சிறையில் இருந்தவன் வெளி வருகின்றான். வெளி வருகின்றான் என்றால் தப்பித்து அல்ல.. விடுவிக்க படுகின்றான்..
ஆனால் எவன் கடத்தினான் என்பது தெரியாது… ஒரு நாள் இல்லை இரண்டு நாள் இல்லை.. பதினைந்து வருடம்.. தனிமை சிறை வேறு… சாப்பிட்டு பேண்டு…. என்ன வாழ்க்கை…? அதற்கு காரணமாவனை ங்கோத்தா எவன்டா அவன் என்று கண்டு பிடித்து சல்லி சல்லியாக செதில் செதிலாக வெட்டி போட வேண்டும் என்று ஒரு கோவம் வரும் அல்லவா.? படம் பார்க்கும் நமக்கே வரும் போது…? அவனுக்கு வராதா? என்ன-
அவன் கண்டு பிடித்தானா..?
ஏன் கடத்த வேண்டும் என்ற ஆதார கேள்விதான் அந்த திரைப்படத்தை கடைசி வரை பார்க்க வைக்க அதி முக்கியம்.
செம்பை ஒரு மளிகைகடைக்காரன் திடிர் என்று அவன் வாழ்க்கையில் ஒரு போன் கால் வருகின்றது… இன்னும் ஒரு வாரம்தான் எல்லாம் அதுக்கு அப்புறம் சாக போறே… என்று அந்த ஆண் குரல் சொல்கின்றது.. அதே போல அந்த ஒரு வாரத்தில் அவனை பின்னங்கால் பிடறியில் விழும் அளவுக்கு கதற வைக்கிறான்… யார் அவன்..? எதற்கு சாதாரண மளிகை கடைகாரனை கதற வைக்க வேண்டும் என்பதுதான் அசுரவதம் திரைப்படத்தின் கதை..
சும்மா சொல்லக்கூடாது,.. முதல் 45 நிமிடங்கள் வசனங்கள் அதிகம் இல்லாது மிரட்டி இருக்கின்றார்கள்…
சுப்ரமணியபுரம் திரைப்படத்துக்கு பிறகு சசிக்குமார் கேமராமேன் கதிர் பார்மில் இருக்கின்றார்கள்…
திடிர் என்று முளைத்த துப்பாக்கிதான்… கொஞ்சம் திரைக்கதையில் நெருடல்…
முக்கியமாக மார்கெட்டில் நடந்து வரும் காட்சியில் மியூசிக் எடிட்டிங் கேமராமேன் என்று மூவரும் சேர்ந்து அசத்தி இருக்கும் காட்சி…
அதே போல லாட்ஜ் பைட் சீன் ரெய்டு திரைப்படத்தை நினைவுபடுத்தினாலும் அசத்தாலான பைட் சிக்வென்ஸ் என்பதை மறுக்க முடியாது…
ஒரு சில குறைகள் இருந்தாலும் இந்த திரைப்படம் குறைந்த பட்ஜெட்டில் 5 மெயின் கேரக்டர்களை மட்டும் வைத்துக்கொண்டு ஒரு படத்தை எப்படி சிறப்பாக கொடுக்க வேண்டும் என்று படிக்க சினிமா காதலர்கள் அவசியம் பார்க்க வேண்டிய படம்…
சிலர் படம் பார்த்து விட்டு உதடு பிதுக்கினார்கள்… அவர்களை விட்டு தள்ளுங்கள் நீங்கள் பார்த்து விட்டு சொல்லுங்கள்.
பிரியங்களுடன்
ஜாக்கிசேகர்.
https://www.youtube.com/watch?v=2p-VJf5CqCk