விழுப்புரம் மாவட்ட விஜய் மக்கள் இயக்கத்தின் நலத்திட்ட உதவிகள் !

தளபதி விஜய் மக்கள் இயக்க விழுப்புரம் மாவட்டம் ரிசிவந்தியம் ஒன்றியம் எடுத்தனூர் கிராமத்தில் கிளை மன்ற தலைவர் திருநாவுக்கரசு அருணா திருமண விழாவில் ரிசிவந்தியம் ஒன்றிய தலைவர் j .சுந்தரமூர்த்தி அவர்கள் ஏற்பாடு செய்திருந்த 2 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளான மருந்து தெளிப்பான் இயந்திரம் 44 பேருக்கும் ,விதைநெல் 100 பேருக்கும் ,அரிசி 2 கிலோ வீதம் 100 பேருக்கும் ,இலவச சேலை 300 பேருக்கும் ,வேட்டி 200 பேருக்கும் ,600 பேருக்கு நோட்டு புத்தகங்களும் ,டிப்பன் பாக்ஸ் 400 குழந்தைகளுக்கும், 200 பேருக்கும் மரக்கன்றுகளும் ஆகியவற்றை அகில இந்திய தலைமை விஜய் மக்கள் மன்ற மாநில பொறுப்பாளர் திரு .புஸ்ஸி N .ஆனந்து ( EX MLA ) அவர்கள் வழங்கினார் .நிகழ்ச்சியில் விழுப்புரம் மாவட்ட பொறுப்பாளர் பரணி பாலாஜி வடக்கு மாவட்ட தலைவர் ,குஷிமோஹன் நகர ஒன்றிய நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.