எழுத்தாளர் பாலகுமாரனுக்கு அஞ்சலிகள்

நான் சட்டென உடைவது ரொம்பவும் ரேராக நடக்கும்…

மதியமே ஐயா பாலகுமாரன் வீட்டுக்கு நண்பர் ஜெகனோடு சென்று விட்டேன்….

ஐயாவுக்கு இறுதி அஞ்சலியை மனம் உருக செய்துவிட்டு வெளியே நின்றுக்கொண்டு இருந்தேன்…

சுவாச பிரச்சனையில் சில காலமாக சிரமப்பட்டு இருந்தார்… 71 வயது என்று சொல்லி மனதை தேற்றி அமைதியாய் நின்றுக்கொண்டு இருந்தேன்…

யோகிராம்சுரத்குமார் யோகிராம்சுரத்குமார் என்று சன்னமாக பெண்கள் பாடிய படி இருந்தார்கள். அழுகை ஏனோ வரவில்லை..

சாந்தாம்மா வந்தார்கள்.. ஆதரவாய் கை பற்றினேன்…

ஜாக்கி அப்பா போயிட்டாரு என்றார்கள்…

ஒரே ஒரு வார்த்தை அவ்வளவுதான்…

சட்டென துக்கம் தொண்டையை அடைக்க வெடித்து அழுகை அடிவயிற்றில் இருந்து புறப்பட்டது…

#Bhalakumaaran #balakumaran #writterbalakumaran #பாலகுமாரன் #பாலா #யோகிராம்சுரத்குமார்

ஐயாவுக்கு அஞ்சலிகள்.

https://www.youtube.com/watch?v=pe6FdwcoLRo&t=4s