Ocean’s Eleven 2001 Hollywood Movie Review

ஆனந்த விகடனில் ஜெயலலிதா பயலலிதா என்று ஒரு கட்டுரை வெளியாகி இருந்தது.. அந்த கட்டுரையின் ஆரம்ப வரிகள் நன்றாக இருந்தது…

இன்றைய தேதிக்கு வேண்டுமானால் நமக்கு 66 கோடி சாதரணமாக இருக்கலாம் ஆனால் 15 வருடத்துக்கு முன் 66 கோடி என்பது பெரும் பணம்… அது போலத்தான்..ஒரு லட்சத்து எழுபது ஆயிரம் கோடி என்று எல்லாம் கேள்விபட்டு விட்டு, 160 மில்லியன் டாலர் கொள்ளை அடிக்க போகின்றார்கள் என்று சொன்னால் சற்று அயற்சியாகத்தான் இருக்கும் என்ன செய்வது?? கால ஓட்டம் அப்படி படுத்தி எடுத்து விட்டது…

ஆனால் நிதர்சனம் என்பது என்ன தெரியுமா?- இன்னமும் நண்பரிடம் 500ரூபாய் கடன் வாங்குவது என்பது சாமான்ய மனிதர்களை பொறுத்தவரை குதிரைக் கொம்பாக இருக்கின்றது.. அதனால் நீங்கள் ஒரு சாமானிய மனிதனாக 160மில்லியன் டாலரை கற்பனை செய்துக்கொள்ளுங்கள்…. அது எவ்வளவு பெரிய பெரும் பண்ம் என்பதை நீங்கள் உணர்வீர்கள்.. இப்ப சப்ஜெக்குடுக்கு போகலாமா??

இந்த படத்தை ரசித்து பார்த்தது போல, நான் வேறு எந்த படத்தையும் அப்படி ரசித்து பார்த்தது இல்லை. அப்படி ஒரு ஸ்டைலான படம்….காரணம் ஜார்ஜ்குலூனி அவருடைய மேன்லி நஸ் அவர் நடித்ததில் எனக்கு ரொம்ப பிடித்த படம் என்றால் பீஸ் மேக்கர் படத்தைதை குறிப்பிட்டு சொல்லுவேன்..

பொதுவாக கொள்ளை அடிக்ககும் படங்கள் என்றால் ரத்தம் அதிகம் தெரிக்கும்…

கழுத்தில் கத்தி வைத்து அறுத்து விடுவார்கள்.. மார்பில் துப்பாக்கியால் சூட்டு ரத்தம் பீறிட வைப்பார்கள்..

காதலியை கடத்தி கற்பை பரிசோதிப்பார்கள்..

பிள்ளைகளை கடத்தி ஈவு இரக்கம் இல்லாமல் கொன்று விடுவார்கள்…

வீட்டில் வளர்க்கும் செல்ல பிராணியை நடு மண்டையில் சுடுவார்கள்…,

கொள்ளை அடிப்பதை பார்த்த ஐவிட்னஸ் வீட்டில் புகுந்து கேஸ்கனெக்ஷனை அறுத்து வீட்டையே சொக்க பானையாக மாற்றி எரிய விடுவார்கள்..

துப்பாக்கியும் கையுமாகத்தான் அலைவார்கள்..

பிரேமுக்கு பிரேம் துப்பாக்கியை எடுத்து லோட் செய்வதும் அன்லோட் செய்வதுமாக செய்து செய்து பார்த்துக்கொண்டே இருப்பார்கள்…

கொள்ளை அடிப்பவர்கள் கொடுர மிருகத்துக்கு இணையாக சித்தரிக்க படுவார்கள்..

தீபாவளிக்கு சின்ன பசங்க ரோல் கேப்பு போட்டு துப்பாக்கியால் அடிக்கடி சுட்டு விளையாடுவது போல, சகட்டு மேனிக்கு சுட்டுக்கொண்டே இருப்பார்கள்..

கொள்ளையன் தலைவனின் அல்லக்கையாக இரண்டு பெருத்த மார்பு பெண்கள் சுற்றிக்கொண்டு இருப்பார்கள்.. மார்பகத்தை முக்கால்வாசியை சென்னை தீவுத் தீடல் பொருட்காட்சி போல கடை விரித்து காட்டிக்கொண்டு இருப்பார்கள்..

முக்கியமான விஷயம் கொள்ளை அடிக்கும் தலைவனோடு இருக்கும் பெண்கள் பிராவை அணியவேமாட்டர்கள்.. மார்பு காம்பு அவர்கள் போட்டு இருக்கும் சட்டையை விட்டு வெளியே தெரிவது போல உடை அணிவார்கள்..

கொள்ளக் கூட்ட பாசுக்கு காதலியாக வரும் பெண்கள் பின்பக்கத்தை பெரிதாக அரக்கி அரக்கி நடப்பார்கள்..

அவர்கள் இந்திய பெண்கள் பயண்பபடுத்துவது போல மை கண்களில் தீட்டி இருப்பார்கள்…

வில்லன் கூட்டத்தில் இருக்கும் வில்லி பெண்கள்..எந்த டயலாக் பேசினாலும் ஐஸ்கிரீம் நக்குவதுக்கு ரெடியாக இருப்பது போல வாயை வைத்துக்கொண்டு பேசிவார்கள்..

குறிப்பாக சின்ன மார்பகத்தோடு இருந்தால் மட்டுமே கொள்ள்ளை கூட்ட பாசின் காதலியாக இருக்க தகுதி படைத்தவர்கள்..

எதிர்பாராத நேரத்தில் ஒரு கொலையவது கொள்ளையனின் காதலி செய்வது வழக்கம்.. கொலை செய்த பிணத்தை ஜடஸ்ட் லைக்தட்டாக எட்டி உதைத்து விட்டு வருவார்…

அதே போல அந்த பெண்களின் காம போதை ரியாக்ஷனை இயல்பு வாழ்க்கையில் யாருமே பார்த்து இருக்க மாட்டீர்கள்.. அப்படி ஒரு ரியாக்ஷனை பார்க்கலாம்..

வில்லன் சளிபிடித்தாலும் மயிரா போச்சி என்பது போல இரண்டு பிகினி போட்ட குட்டிக்களோடு நீச்சல் குளத்துல மிதந்துகிட்டு, தண்ணி அடிப்பது போல ஒரு காட்சியாவ இருக்கும்.. அந்த இடத்தில் கொலை நடந்தாலும் நடக்கும் முக்கியமா, தகவல் தப்பா சொன்ன கூட்டாளி நெஞ்சுக்கோ அல்லது கு………க்கோ துப்பாக்கி குண்டு உறுதி…

கொள்ளை கூட்ட ஆட்டகள் எப்போதும் ஊர் பக்கம் உமா மூக்கு பொடிய அடிக்கடி போடுவது போல ஸ்டப்பை கண்ணாடி டீபாய் மேல் இழுத்துக்கொண்டே இருப்பார்கள்..அந்த இடத்தில் ஒரு லோ ஆங்கி ள் ஷாட் நிச்சயம்.. அப்படி அவர்கள் முக்கால் உறிஞ்சி விட்டு தலையையும், உடலையும் உலுக்கும் போது நமக்கே தும்மல் வந்து தொலைப்பது போல இருக்கும்.

கொள்ளை அடிப்பவர்கள் மோஸ்ட்லி செயின் ஸ்மோக்கராக இருப்பார்கள்.. அந்த கூட்டத்தில் ஒருவன் வளையம் வளையமாக புகை விடுவான்..

காரை காட்டுதனமாக ஓட்டுவார்கள்.. அடிப்பது பெரிய கொள்ளை என்பதை காட்ட மிக பரபரப்பாக இருப்பார்க்ள்.

காரை நியூயார்க் வீதிகளில் கண்டமேனிக்கு ஓட்டுவார்கள்.. நிறைய கார் மோதல்கள் நிகழும்.. ஹெலிகாப்டரில் இருந்து போலிஸ் சர்வ நிச்சயமாக துரத்துவார்கள்..

வில்லன் குழுவில் இருப்பவர்களில் யாராவது ஒருவர் நம்பிக்கை துரோகம் செய்பவார்… அதனால் அவர் கண்டு பிடிக்கபட்டு கொடுரமாக கை விரல்கள் அல்லது அவரு மெட்டர் பாயிண்ட்டில் சுட்டு வில்லன் சாகடிப்பார்…

நியூயார்க் மக்கள் அச்சப்பட்டதை டிவியில் காட்டிக்கொண்டே இருப்பார்கள்… துடிப்பான ஒரு போலிஸ் ஆபிசர் தன் உயிரை பணயம் வைத்து காரில் கண்டிப்பாக துரத்துவார்.. அவரோடு இருக்கும் ஒரு நல்ல அசிஸ்டென்ட்டை ஒரு சுபயோக தினத்தில் வில்லன் சுட்டுக்கொன்று விடுவார்….

வில்லனுக்கு என்று ஒரு தனி பாடி லாக்வேஜ் இருக்கும்.. கொள்ளை அடித்த பணத்தை எடுத்துக்கொண்டு ஓடும்போது வில்லன் காதலியின் உதட்டை வெறித்தனமாக பதம் பார்ப்பார்… காதலி வெறியின் உச்சத்தில் இடம் பொருள் ஏவல் பார்க்காமல் உடை அவிழ்த்து மேட்டருக்கு ரேடியாகும் போது, சனியன் புடிச்ச போலிஸ் மூக்கில் வேர்த்து போல வந்து தொலைக்கும்…..

மேலே சொன்னது எல்லாம்… ராப்பரி செய்யும் ஹாலிவுட் படங்களில் காலம் காலமாக சொல்லப்பட்டவை…

ஆனால் ஓஷன் லெவன் திரைப்படத்தில் மேலே நான் குறிப்பிட்ட எந்த விஷயமும் இருக்காது.. இந்த படம் ஒரு பிரேக் த ரூல்ஸ் மூவி.. எதையெல்லாம் கொள்ளை அடிக்கும் படங்களில் ஹாலிவுட்காரர்கள் அரைத்த மாவையே அரைத்தார்களோ… அதையெல்லாம் இந்த படத்தில் இருக்கவே இருக்காது..

11 கொள்ளையார்கள்.. யாருமே எதுக்குமே அலட்டிக்கொள்ளமாட்டார்கள்..160 மில்லியன் டாலர் கொள்ளை அடிக்க போகின்றோம் என்ற பதட்டம் எவரிடமும் கொஞ்சமும் இருக்காது..

மறந்தும் எவரும் ஒரு சேப்டிக்கு கூட துப்பாக்கி எடுத்து யாரையும் சுட்டது இல்லை… கத்தியும் இல்லை ரத்தமும் இல்லை, பரபரபப்பு இல்லை, பக்கவான திட்ட அமைப்பு நடிகைச்சுவையோடு ஒரு கார்பரேட் கபெனியில் வேலை செய்வது போன்ற ஒழுங்கோடு ஆனால் மில்லியன் டாலர் கொள்ளை அடிக்கபடுவது சான்சே இல்லாத ரகம்..

எல்லாத்தை விட மிக முக்கியமான விஷயம் 11 பேரில் யாருமே நம்பிக்கை துரோகம் செய்யவேமாட்டார்கள்..

ஓ நிறைய சொல்லிட்டனோ..???

https://www.youtube.com/watch?v=GJhBiiQUaMw