குந்தி படத்தின் டிரைலரை T.ராஜேந்தர் வெளியிட்டார்

அன்னை திரைக்களம் சார்பில் மே.கோ.உலகேசு குமார், மேடூர் பா.விஜயராகவன், சா.பா.கார்த்திராம் இணைந்து

தயாரிக்க SFF TV வழங்கும் படம் “ குந்தி “

இந்த படத்தில் பூர்ணா கதாநாயகியாக நடிக்கிறார். பூர்ணா ஜோடியாக அபினவ் நடித்திருக்கிறார். ஆடுகளம் கிஷோர், தீரன் அதிகாரம் ஒன்று படத்தில் வில்லனாக நடித்து அனைவரது கவனத்தையும் ஈர்த்த அபிமன்யூ சிங் இந்த படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார். மற்றும் பேபி தன்வி, பேபி கிருத்திகா இருவரும் முக்கிய பாத்திரத்தில் நடித்துள்ளனர். மேலும் பலர் நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.

ஒளிப்பதிவு – கர்ணா

இசை – யஜமன்யா

எடிட்டிங் – SFF TV காளிராஜ், சந்திரபிரகாஷ்

பாடல்கள் – வலங்கைமான், நூர்தின், முருகானந்தம், வள்ளுவர்தேவன்

இணை தயாரிப்பு – மேடூர் பா.விஜயராகவன், சா.பா.கார்த்திராம்

இயக்கம் – பண்ணா ராயல்

வசனம் மற்றும் ஒருங்கிணைப்பு – A.R.K.ராஜராஜா

தயாரிப்பு – மே.கோ.உலகேசுகுமார்

இந்த படத்தின் டிரைலரை இயக்குனரும், நடிகருமான T.ராஜேந்தர் வெளியிட்டார்.

Previous articleAudio Launch Of Superstar Rajinikanth’s Kaala Audio Will To Be Held On May 9th In Chennai YMCA
Next articleBodha Movie Stills