தென் மாவட்டங்களின் மண் சார்ந்த படைப்பாக உருவாகி உள்ளது ” தொரட்டி “

மண்ணும் மரபும் சார்ந்த கதைகளுக்கு எப்போதும் மவுசு அதிகம் தான். அப்படிபட்ட உண்மை கதைகள் திரைப்படம் ஆகும் போது வெற்றிகள் இலகுவாகும். அப்படிப்பட்ட ஓரு உண்மை சம்பவம் தொரட்டி எனும் தலைப்பில் திரைப்படம் ஆகிறது. 1980 காலகட்டத்தில் தென் மாவட்டத்தில் நடந்த ஓரு உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்ட திரைப்படம் தான் தொரட்டி. கிடை போட்டு வெட்ட வெளிகளில் பொழைப்பு நடத்தும் கீதாரி குடும்பங்களின் வாழ்வியலை கண் முன் நிறுத்தும் திரைப்படம் தான் தொரட்டி. ராமநாதபுரத்தில் இருந்து கிடை போட்டு பொழைப்பு நடத்த வரும் ஓரு கீதாரி குடும்பத்தின் வாழ்க்கையில் வெந்த சோறு சுட்ட கறி பட்ட சாரம் இவற்றிக்காக எந்த பழி பாவத்தையும் செய்ய துடிக்கும் காவாலி கூட்டம் ஏற்படுத்தும் துடி துடிக்கும் நிகழ்வுகள் தான் தொரட்டி. இதில் மாயன் எனும் கதாபாத்திரத்தில் கதை நாயகனாக வாழ்ந்திருக்கிறார் ஷமன் மித்ரூ… இவருக்கு இணையாக செம்பொன்னு எனும் கதாபாத்திரத்தில் புதுமுகம் சத்யகலா மற்றும் நல்லையாவாக அழகு மேலும் சோத்துமுட்டி.ஈப்புலி செந்தட்டி எனும் மாறுபட்ட கதாபாத்திரங்களில் புதுமுகங்கள் தங்களின் பங்களிப்பை சிறப்பாக செய்திருக்கின்றனர். சினேகனின் அற்புதமான கிராமிய வரிகளுக்கு வேத்சங்கர் மெட்டமைக்க பின்னணி இசையை ஜித்தின் ரோஷன் சிறப்பாக செய்ய படத்தொகுப்பை ராஜா முகமது திறம்பட செய்ய குமார் ஸ்ரீதர் ஒளிப்பதிவு பேசும்படி அமைந்து இருக்கிறது. ஷமன் பிக்சர்ஸ் தயாரிப்பில் வசனம் எழுதி இயக்கிருக்கிறார் பி. மாரிமுத்து.

Previous articleCaptain 40 Celebration Photos
Next articleபூர்ணா நடிக்கும் பிரமாண்ட பேய் படம் “ குந்தி “