கடுமையான உடல் வலி ஜூரம் வாந்தி பேதி என்று கடந்த வாரம் படுத்தி எடுக்க… கொஞ்சமாய் உடல் தேற….
கடந்த சனிக்கிழமை (07/04/2018 ) இரவு ரொம்பவும் போர் அடிக்க மவுண்ட் ரோட்டுக்கு போய் தாராபூர் டவர் அருகில் பத்து ரூபாய்க்கு காபி வாங்கி குடித்து விட்டு வருவது எங்கள் வழக்கம்…
சனி இரவுதானே நாளை ஞாயிறு என்பதால் காரில் பதினோரு மணிக்கு கிளம்பினோம்…
சரி தனியா போவானேன் என்று மனைவியின் நண்பி மற்றும் அவள் மகளையும் அழைத்துக்கொண்டு செல்லலாம் என்று அழைத்தேன்…
இது போல நள்ளிரவில் காபி குடிக்க செல்லும் போது மறக்காமல் அழைக்கவும் என்ற அன்பு வேண்டுகோள் காரணமாக அவர்களை அழைத்தேன் அவர்கள் பாலவாக்கத்தில் இருந்தார்கள்.. சரி என்று ஒரு லாங் டிரைவ் போய் அவர்களை அழைத்துக்கொண்டு காபி சாப்பிட மவுண்ட்ரோட் சென்றோம்…
காபி குடித்து பீச் ரோட்டில் பயணிக்க மணி இரண்டு ஆகி விட்டது
மயிலை ரயில்வே ஸ்டேஷன் பக்கத்தில் செல்லும் போது ஒரு வெள்ளைக்கார பெண் ஓடுவதும் இரண்டு பசங்க கைனட்டிக் ஹோண்டாவில் துரத்துவதுமாக இருக்க காரை ரவுண்ட் கட்டி நிறுத்தினேன்..
மனைவியை அவளிடம் யார் என்ன என்று விவரம் விசாரிக்க சொன்னேன்.
பெயர் மரியா ரஷ்யாவில் இருந்து ஆரோவில் வந்து இருக்கின்றாள்… சந்தோம் சர்ச் தரிசிக்க வந்த இடத்தில் நேரம் ஆகி போனாதால் மயிலை பக்கம் நடக்க…
அதே நேரத்தில் கைனட்டிக்கில் அவளை துரத்தியவர்களை பார்த்தேன்… இரண்டு பேரும் மாவா போட்டுகொண்டு… சரக்கில் இருந்தார்கள்..
அண்ணே இந்த வெள்ளக்கார பெண்ணை சல்லி சல்லியா சின்ன பின்னமாக்க லஸ் சிக்னலுக்கு அப்பால ஒரு கூட்டமே வெயிட் பண்ணிக்கிட்டு இருக்கு..
நாங்கதான் காப்பாத்தினோம்.. என்றான்…
சரி நாங்க பார்த்துக்கறோம் என்று சொன்ன பிறகும் சில ஆட்டோவலாக்கலுடன் அவர்கள் வெயிட் செய்துக்கொண்டு இருந்தார்கள்..
நான் மரியாவை காரில் ஏறச்சொன்னேன்..
தோழியையும் அவள் மகளையும் பாலவாக்கத்தில் இறக்கி விட்டு உனக்கு ஆட்சேபனை இல்லைன்னா எங்க வீட்டுல தங்கறியா என்றேன்…
இரவு விடியற்காலை மூன்று மணிக்கு மரியா எங்கள் புது வீட்டுக்கு வந்தாள்…… அதன் பின் காலை டிபன் கொடுத்து சாந்தோம் சர்ச்சில் சாமி கும்பிட வைத்து ஆரோவில்லுக்கு அனுப்பி வைத்தோம்.
ஒருவேளை நான் காரை மரியாவுக்காக நிறுத்தவில்லை என்றால்… எது வேண்டுமானாலும் நடந்து இருக்கலாம்…
போகும் போது மரியா சொன்னாள்….
ஜாக்கி சுதா… யூ கய்ஸ் ஆர் மை சேவியர் என்றாள்..
அது முகஸ்துதிக்காக சொன்ன வார்த்தை அல்ல
இதயத்தில் இருந்து சொன்ன வார்த்தை…
பிரியங்களுடன்
ஜாக்கிசேகர்.
15/04/2018
குறிப்பு …
கடந்த ஞாயிற்று கிழமை மதியம் மரியாவை ஆரோவில்லும் பேருந்தில் ஏற்றி அனுப்பினோம்.. தற்போது ஸ்ரீலங்கா சென்று நேற்று மஸ்கோ செல்வது அவள் பயணதிட்டம்..
வீடியோவில் இன்னும் விரிவாய்…. ஒரு விரிவான கதை போல…
https://www.youtube.com/watch?v=lZJa-54u8SQ