தனது ரசிகர்களோடு நேரடி தொடர்பை ஏற்படுத்த இணையதளம் தொடங்கிய நடிகர் சண்முக பாண்டியன்

கேப்டன் விஜயகாந்தின் கலைவாரிசான சண்முகபாண்டியன் திரைத்துறையில் வேகமாக வளர்ந்து வருகிறார். சகாப்தம் திரைப்படத்தின் மூலம் சண்முகபாண்டியன் அறிமுகமானார். திரையுலகே சண்முகபாண்டியனை அன்புடன் வரவேற்றது. தனது முதல் திரைப்படத்தில் திரையுலக பிரபலங்களின் ஆதரவைப் பெற்ற நடிகர் சண்முகபாண்டியன், தனது இரண்டாவது படமான மதுரைவீரன் திரைப்படத்தால் ரசிகர்களின் பேராதரவை பெற்றிருக்கிறார்.

திரையுலகினரால் கேப்டன் என்று அழைக்கப்படும் விஜயகாந்த் நடிகர் சங்கத் தலைவராகவும் பின்னர் தேமுதிக கட்சியை ஆரம்பித்து எதிர்க்கட்சி தலைவராக இருந்தபோதும் ரசிகர்களுடன் நேரடி தொடர்பில் இருந்திருக்கிறார். இப்போது அவரது வாரிசான சண்முகபாண்டியனும் அவரது ரசிகர்களை நேரடி தொடர்பில் வைத்துக் கொள்ள புதிய முயற்சியாக www.shanmugapandian.com என்னும் இணையதளத்தை ஆரம்பித்திருக்கிறார். தனது பிறந்த நாளான ஏப்ரல் 6-ஆம் தேதி​ 2018​ நாளை காலை 10 மணி அளவில் இந்த இணையதளம் ரசிகர்களின் பயன்பாட்டிற்கு வரும் என அறிவித்து இருக்கிறார்.

திரையுலக பிரபலங்களில் ஒரு சிலர் மட்டுமே ரசிகர்களுடன் நேரடி தொடர்பில் இருக்க ஆசைப்படுவதுண்டு. நடிகர் சண்முகபாண்டியன் தன் ரசிகர்களுடன் நல்லுறவை பேணி காக்க வேண்டும் என்று நினைப்பது பாராட்டுக்குரியது.

Previous articleI Saw The Devil (2010) Korean Movie Review
Next articleActress Tejashree Jadhav Photoshoot Images