நடன இயக்குனர் பாரதி கடந்த 17 ஆண்டுகளாக தமிழ் சினிமாவில் டான்சராக சுமார் 1000 பாடல்களுக்கு நடனமாடி இருக்கிறார். இவர் பிருந்தா, கல்யாண், ராபர்ட் ஆகிய மாஸ்டர்களிடம் உதவியாளராக பணியாற்றி உள்ளார்.
தற்போது பிக்பாஸ் புகழ் ஓவியா நடிப்பில் உருவாகியுள்ள “ ஓவியாவ விட்டா யாரு “ என்ற படத்தின் மூலம் நடன இயக்குனராக அறிமுகமாகி தொடர்ந்து வீரதேவன், பவித்ரன் இயக்கத்தில் தாராவி, ஏ.வெங்கடேஷ் இயக்கத்தில் நேத்ரா, பா.விஜய் இயக்கத்தில் ஆருத்ரா, தம்பிராமைய்யா இயக்கத்தில் அவரது மகன் நடிக்கும் “ உலகம் விலைக்கு வருது “ மற்றும் எழில், லிங்குசாமி, பூபதிபாண்டியன், ஆர்.கண்ணன், பன்னீர்செல்வம் போன்ற பிரபல இயக்குனர்களின் படங்களிலும், தெலுங்கில் இயக்குனர் கிரண், இயக்குனர் பரத் ஆகியோரின் படங்களிலும் தற்போது நடன இயக்குனராக பணியாற்றி வருகிறார்.
ஏ.வெங்கடேஷ் இயக்கத்தில் உருவாகி உள்ள “ நேத்ரா “ படத்தில் நடன இயக்குனராக பணியாற்றியதோடு அந்த படத்தில் இடம்பெறும் “ வந்துடாயா வந்துடாயா குத்து பாட்டு பாட வந்துடாயா “ என்ற பாடலில் இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவா, ரோபோசங்கர், இமான் அண்ணாச்சி ஆகியோருடன் நடனமாடி இருக்கிறார்.
சிறந்த நடன இயக்குனர் என்ற பெயர் எடுப்பதே எனது லட்சியம் என்கிறார் நடன இயக்குனர் பாரதி.