எனது சினிமா வாழ்க்கையின் சிறந்த படங்களில் ஒன்று ‘கண்ணே கலைமானே’ – தமன்னா

சிறந்த படைப்பை நோக்கி தனது வாழ்வின் ஒவ்வொரு நொடியையும் கடப்பவர் இயக்குனர் சீனு ராமசாமி என்றால் மிகை ஆகாது. சினிமாவின் அடிப்படை உணர்வுகள் தான், என்பதையும் மிக நன்கு புரிந்திருப்பவர் அவர் . மனிதர்களின் உணர்வுகளை சமுதாய பொறுப்போடு அழகாக இணைத்து தருவதில் கை தேர்ந்த சீனு ராமசாமியின் மிகவும் எதிர்பார்க்கப்படும் அடுத்த படமான ‘கண்ணே கலைமானே’ படத்தில் உதயநிதி ஸ்டாலின் மற்றும் தமன்னா ஆகியோர் முதன்மை கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இந்த படம் ரசிகர்கள் மத்தியிலும் விநியோகத்தர்கள் மத்தியிலும் பெரும் ஆவலையும் எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது .இந்த படத்தை ‘Red Giant Movies’ நிறுவனம் தயாரிக்கின்றது. சீனு ராமசாமி, யுவன் ஷங்கர் ராஜா , கவி பேரரசு வைரமுத்து ஆகியோரின் கூட்டணி தொடர்ந்து ஹிட் பாடல்கள் கொடுக்கும் கூட்டணி என்பதால் இந்த படத்துக்கு இசை தரப்பிலும் பெரும் எதிர்பார்ப்பு இருக்கிறது. ‘கண்ணே கலைமானே’ படத்திற்கான தனது படப்பிடிப்பினை சமீபத்தில் முடித்தார் தமன்னா.

இது குறித்து தமன்னா பேசுகையில் , ” நிறைய பேசாமலேயே நடிகர்களுக்கு அவர்களது கதாபாத்திரத்தையும் , தனக்கு என்ன வேண்டும் என்பதையும் மிக சிறப்பாக விளக்கி, வேலை வாங்குபவர் இயக்குனர் சீனு ராமசாமி. ‘தர்மதுரை’ படத்திற்கு பிறகு அவருடன் சேர்ந்து மீண்டும் பணிபுரியவேண்டும் என ஆவலோடு இருந்தேன். எனது சினிமா வாழ்க்கையின் சிறந்த படங்களில் ‘கண்ணே கலைமானே’ நிச்சயம் ஒன்றாகும்.இந்த படத்தில் உதயநிதி அவர்களின் கதாபாத்திரத்தையும் நடிப்பையும் தமிழ் சினிமா ரசிகர்கள் நிச்சயம் ரசித்து கொண்டாடுவார்கள். அவ்வளவு சிறப்பாக அவர் நடித்துள்ளார். ‘கண்ணே கலைமானே’ படத்தின் ஒரு அங்கமாக இருப்பதில் பெருமை கொள்கிறேன் ”.

Previous articleAuraa Cinemas காவியா மகேஷ் அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்து கொள்கிறேன் – இயக்குனர் அவினாஷ் ஹரிஹரன்
Next articleAllu Arjun’s ‘En Peyar Surya En Veedu Indhiya’