காலா படத்தில் நடித்துள்ள நானா படேகர் தனக்கான தமிழ் மற்றும் ஹிந்தி டப்பிங் பணிகளை முடித்துள்ளார்!

‘கபாலி’ படத்தை தொடர்ந்து சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும்
பா. ரஞ்சித் ஆகியோர் இணைந்து ‘காலா’ படத்தை உருவாக்கி உள்ளனர். இப்படத்தினை நடிகர் தனுஷ் தனது வுண்டர்பார் பிலிம்ஸ் மூலம் தயாரித்துள்ளார்.லைக்கா ப்ரொடக்க்ஷன்ஸ் இந்த படத்தினை வெளியிடுகிறது.சந்தோஷ் நாராயணன் இப்படத்திர்ற்கு இசை அமைத்துள்ளார்.மேலும், இதில் சமுத்திரகனி, நானா படேகர்,அஞ்சலி படேல் ,சம்பத், சாயாஜி ஷிண்டே, அருள்தாஸ், ஹூமா குரேஷி, வத்திக்குச்சி திலீபன், அரவிந்த் ஆகாஷ், சுதான்ஷூ பாண்டே, ஈஸ்வரிராவ், சாக்ஷி அகர்வால் என பலர் நடித்துள்ளனர்.

சமீபத்தில் இப்படத்தின் டீஸர் வெளியானது .டீஸர் ரசிகர் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று யூ- டியூபில் டாப் ட்ரெண்டிங்கில் தற்போதும் உள்ளது.

இந்நிலையில் காலா படத்தில் முக்கிய கதாபாத்திரமாக வில்லன் வேடத்தில் நடித்திருந்த பாலிவுட் நடிகர் நானா படேகர் அவருக்கான தமிழ் மற்றும் ஹிந்தி டப்பிங் பணியை இன்று முடித்துள்ளார்.

இத்திரைப்படம் ஏப்ரல் 27 ஆம் தேதி உலகெங்கிலும் ரிலீசாக உள்ளது.

நடிகர்கள்:
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், நானா படேகர் ,சமுத்திரக்கனி,
சம்பத், ரவி கேளா ,சாயாஜி ஷிண்டே, பங்கஜ் த்ரிபாதி, மிகி மகிஜா, மேஜர் பிக்ரம்ஜித், அருள்தாஸ், சுதன்ஷூ பாண்டே, அரவிந்த் ஆகாஷ், ‘வத்திகுச்சி’ திலீபன், ரமேஷ் திலக், மணிகண்டன், ஹுமா குரேஷி, அஞ்சலி பட்டேல், ஈஸ்வரிராவ், அருந்ததி, சாக்ஷி அகர்வால், நிதிஷ், வேலு,அருந்ததி, ஜெயபெருமாள், கருப்பு நம்பியார், யதின் கார்கேயர், ராஜ் மதன், சுகன்யா.

தொழில் நுட்பக்குழு:

இயக்குனர் – பா. ரஞ்சித்
இசை – சந்தோஷ் நாராயணன்
ஒளிப்பதிவு – முரளி . ஜி
கலை இயக்கம் – டி.ராமலிங்கம்
படத்தொகுப்பு – ஸ்ரீகர் பிரசாத்
சவுண்ட் டிசைன்ஸ் – ஆண்டனி பி ஜெயரூபன்
கிரியேட்டிவ் டிசைனர் – வின்சி ராஜ்
சண்டைப்பயிற்சி – திலீப் சுப்பராயன்
நடனம் – சாண்டி
ஆடை வடிவமைப்பு – அனு வர்தன், சுபிகா
ஒப்பனை – பானு பாஷ்யம், ராஜா
ஸ்டில்ஸ் – ஆர்.எஸ்.ராஜா
தயாரிப்பு மேற்பார்வை – எஸ்.பி. சொக்கலிங்கம், ஆர். ராகேஷ்
நிர்வாகத் தயாரிப்பு – எஸ்.வினோத்குமார்
தயாரிப்பு – வுண்டர்பார் பிலிம்ஸ் பிரைவேட் லிமிடெட்
மக்கள் தொடர்பு – ரியாஸ் கே அஹ்மது

Previous articleகிருஷ்ணகிரி மாவட்ட விஜய் மக்கள் இயக்கத்தின் மாபெரும் நலத்திட்ட உதவிகள் !
Next articleWomen’s Day Special Dakanunpo Intitna Dakanunka Song – Kamoora