அபிசரவணன் கதாநாயகனாக நடிக்கும் ஹாரர் படம் ‘வெற்றிமாறன்’..!

லுலு கிரியேஷன்ஸ் சார்பில் எம். எஸ்.சுல்பிகர் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘வெற்றிமாறன்’.. அபிசரவணன் கதாநாயகனாக நடித்துள்ள இந்தப்படத்தில் கதாநாயகியாக புதுமுகம் வினோலியா அறிமுகமாகிறார். மனோ என்பவர் இந்தப்படத்தை இயக்கியுள்ளார்.

தலைவாசல் விஜய், பிளாக் பாண்டி, கிரேன் மனோகர், ஜெயமணி உள்ளிட்ட பலர் இந்தப்படத்தில் நடித்துள்ளனர். குணசேகரன் என்பவர் ஒளிப்பதிவு செய்துள்ள இந்தப்படத்திற்கு டேவிட் கிறிஸ்டோபர் என்பவர் இசையமைத்துள்ளார்.

இறைவனின் படைப்பில் அனைத்து உயிரினங்களும் தங்களுக்கு விதிக்கப்பட்ட வாழ்க்கை முறையை வாழ்கின்றன. ஆனால் மனிதன் மட்டும் தான் தனது இயல்பு வாழ்க்கைக்கு முரணாக வாழ விரும்புகிறான். அதனால் தான் காதல் என்கிற இயல்பான ஒரு விஷயத்தை அவனால் சாதரணமாக எடுத்துக்கொள்ள முடியாமல் அதை தடுக்க பல வழிகளில் முயற்சிக்கிறான்.

இயற்கையின் படைப்பில் காதல் இயல்பான ஒன்று. ஆனால் எப்போதுமே சமுதாயத்தால் ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்றாகவும் ஆகிவிட்டது. இதனால் பலர் பாதிப்புக்குள்ளாகிறார்கள். சிலர் பலியாகவும் செய்கிறார்கள். அப்படி பாதிக்கப்பட்ட ஒருவர் உயிர் தப்பி, தனது நிலைக்கு காரணமானவர்களை பழிவாங்க கிளம்பினால்..? அதுதான் இந்தப்படத்தின் கதை.

இதை கொஞ்சம் ஹாரர் கலந்து வித்தியாசமான முறையில் உருவாக்கியுள்ளார் இயக்குனர் மனோ. குறிப்பாக பழிவாங்கும் முறையில் நிறைய உத்திகளை கையாண்டுள்ளார்.. அவை படத்தின் ஹைலைட்டான அம்சமாக இருக்கும். அதுமட்டுமல்ல இந்த பழிவாங்கும் விஷயத்தில் தந்தை மகன் பாசப்போராட்டமும் அடங்குகிறதாம்..

இந்தப்படத்தின் கதையை போனிலேயே கேட்ட நடிகர் அபிசரவணன், கதையால் ஈர்க்கப்பட்டு உடனே இந்தப்படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டாராம்.

தற்போது இந்தப்படம் விறுவிறுப்பான இறுதிக்கட்ட பணிகளில் இருக்கிறது. விரைவில் இசை மற்றும் பட வெளியீடு குறித்த அறிவிப்பு வெளியாக உள்ளது.

தொழில்நுட்ப குழு விபரம்

இசை: டேவிட் கிறிஸ்டோபர்

ஒளிப்பதிவு: குணசேகரன்

டைரக்சன்: மனோ

தயாரிப்பு: எம். எஸ். சுல்பிகர் / லுலு கிரியேஷன்ஸ்

 

Previous articlePacific Rim: Uprising-Releasing on March 23rd in English, Tamil, Telugu & Hindi
Next articleஆங்கிலம் கற்றுக்கொள்வது எப்படி -? கேள்வி பதில்