சில இயக்குனர்களுக்கு மட்டுமே இசை ஞானம் மேலோங்கி இருக்கும். அது அவர்களது பட பாடல்களிலும் பின்னணி இசையிலும் பிரதிபலிக்கும். இந்த வகையை சேர்ந்தவர் தான் இயக்குனர் விஜய். அவரது முதல் படத்திலிருந்து அருமையான பாடல்கள் மற்றும் மறக்கமுடியாத பின்னணி இசைகளை தந்துள்ளதால் அவரது அடுத்த படமான ‘லைகாவின் கரு’ படத்திற்கு எதிர்பார்ப்பு கூடியது. இது நடிகர் நாக சௌர்யா , நடிகை சாய் பல்லவியின் முதல் தமிழ் படம் என்பது குறிப்பிடத்தக்கது. இசையமைப்பாளர் சாம் CS – இயக்குனர் விஜய் கூட்டணியில் உருவாகியுள்ள முதல் படம் இது. சமீபத்தில் வெளியான இந்த படத்தின் பாடல்கள் ,ரிலீசான நாளிலிருந்தே ரசிகர்கள் மத்தியில் சிறப்பான வரவேற்பை பெற்றுவருகிறது.
இது குறித்து இயக்குனர் விஜய் பேசுகையில் , ” சமீபகாலத்தில் தமிழ் சினிமாவின் சிறந்த கண்டுபிடிப்பு இசையமைப்பாளர் சாம் CS. கதையையும், பாடல்களின் சூழ்நிலையையும் சரியாக புரிந்துகொண்டு அசத்துபவர் அவர். இந்த படத்தின் அவரது பாடல்கள் எனது எல்லா படங்களின் மிக சிறந்த பாடல்களில் பட்டியலில் நிச்சயம் இடம் பெறும். ‘லைகாவின் கரு’ படத்தின் பாடல்களுக்கு ரசிகர்கள் தந்திருக்கும் வரவேற்பு எனக்கு ஆச்சிரியமளிக்கவில்லை.ஏனென்றால் நான் அதை எதிர்பார்த்ததுதான். இந்த பாடல்களை போலவே ‘லைக்காவின் கரு’ படமும் ஜீவனுடன் அழகாக இருக்கும் என உறுதியாக கூறுவேன் ”
இந்த படத்தை ‘Lyca Productions’ நிறுவனம் தயாரித்துள்ளது. நீரவ் ஷாவின் ஒளிப்பதிவில், ஆண்டனியின் படத்தொகுப்பில் ‘லைகாவின் கரு’ உருவாகியுள்ளது.