பாலா படம் என்றாலே ஒரு ஒவ்வாமை இருக்கும் இந்த படத்தில் அப்படி இல்லை.. தாரளமாக இந்த திரைப்படத்தை பார்க்கலாம்.. காரணம் முடிவு செம ஜாலியாக சந்தோஷமாக முடித்து இருக்கின்றார்… அதுக்காகவே இந்த திரைப்படத்தை பார்க்கலாம்.
நாச்சியாராக ஜோதிகா பின்னி இருக்கின்றார்..
அந்த வேகம்..ரசிக்கும் படி இருக்கின்றது.. ஒரு சில காட்சிகள் சினிமாதனமாக இருப்பதை மறுக்க முடியாது என்றாலும் நெற்றியில் பூசை போட்டுக்கொண்டு குழந்தையை குளிப்பாட்டும் காட்சியிலும் சரி கிளைமாக்சிலும் சரி.. சான்சே இல்ல.. நீ ரொம்ப பெரிய மனுஷன்டா என்று கண்களில் லைட்டாக கலங்கியபடி சொல்லும்காட்சியில் மிளிர்கின்றார்…
ஜிவி பிரகாஷ்… இதுதான் அவருக்கு முதல் படம்… சான்சே இல்லை.. ஷேர் ஆட்டோவில் பழகிய பெண்ணோடு… அவர் பின் தொடரும் காட்சிகளில் அசத்துகின்றார்.
இவனா.. அந்த வெகுளித்தனத்தோடு காத்திடம் குப்புற கவிழும் காட்சியில் அசத்துகின்றார்.. சிறுவயது காதலையும் காமத்தையும் இந்த கதை போற்றவில்லை.. அப்படி நடந்து விட்டால் அதை எப்படி நாகரிக சமுகமும் விளம்புநிலைசமுகமும் எப்படி எடுத்துக்கொள்கின்றது என்பதை மிக அழகாக திரையில் மிக நெருக்கமாக காட்டி இருக்கின்றார் பாலா.
பாலா படம்தானா?- என்று யோசிக்கும் போது பாலா படம்தான் என்று ஜோதிகா கையில் பிளேட் எடுக்கும் போது பகீர் என்று இருந்தாலும் மற்றபடங்களை பார்க்கும் போது இந்த படம் அந்த அளவுக்கு இல்லை என்பேன்..
ஒரு நல்ல சிறுகதை திரைக்கதையாக மாற்றி ரசிக்கும் படி கொடுக்க முடியும் என்பதைற்கு இந்த திரைப்படம் உதாரணம் அது மட்டுமல்ல… படத்தில் இன்டர்வெல் பிளாக்கும், செகன்ட் ஆப்பும் பரபரன்னு சும்மா பிச்சிக்கிட்டு பறக்குது…
அவசியம் பார்க்க வேண்டிய திரைப்படம்..
பிரியங்களுடன்
ஜாக்கிசேகர்
16/02/2018