Savarakathi Tamil Movie Review by Jackiesekar

கற்றது தமிழ் ராமும் சரி மிஷ்கினும் சரி இரண்டு பேருமே டென்ஷன் பார்ட்டிங்க… ஆனா இதுங்க ரெண்டும் டார்க் காமெடி பண்ணி அது பெரியஅளவுல ஒர்க் அவுட் ஆகி இருக்கற படம்தான் சவரக்கத்தி.

மிஷ்கின் தம்பி ஆதித்யா இயக்கத்துல இரண்டு வருஷத்துக்கு முன்ன ஆரம்பிச்சி ரிலிஸ் எப்ப ஆவும்ன்னு கேள்விகளோடு சுத்தி வந்து படம் ஒரு வழியா ரிலிஸ் ஆயிடுச்சி.

சவரக்கத்தி.. பார்ப்ர் ஷாப்.. 1980களில் பார்பர் ஷாப் எல்லாம் கவர்ச்சி நாயகிகள் அதிகம் நிறைந்து இருக்கும் இடம்… உள்ளே புள்ளா கவர்ச்சி புகைப்படங்கள்தான்.. இது ஓவியாமா இருந்தாலும் போட்டோவா இருந்தாலும் ஏதாவது ஒரு ஆங்கிள்ள.. அந்த பெண் மார்பு காம்பை காட்டியபடி இருப்பாள்..

அதே போல கத்தியை ஒரு பெல்ட் போன்ற பட்டையில் கூர் ஆக்குவார்கள். அதையெல்லாம் இந்த திரைப்படம் பழைய நியாபகங்களை கிளறி விட்டு விட்டது.

சவரக்கத்தி படத்தின் கதை என்ன..??
பிச்சை என்கிற ராம் பார்பர்.. மனைவி பூர்ணா நிறைமாத கர்பிணி மற்றும் இரண்டு பசங்க இருக்காங்க.. மங்கா. என்கிற மிஷ்கின் . ஒரு கொடுரமான மென்டல் ரவுடி சாயங்காலம் பரோல் முடிஞ்சி… ஜெயிலுக்கு போகனும்.. காலையில ஒரு சின்ன பிரச்சனையில முட்டிக்க… மங்கா பிச்சையை கொல்ல துரத்துறான்.. பிச்சை தப்பிச்சான இல்லையான்னு டார்க் ஹூயூமர் ஜானர்ல வயிறு வலிக்க சொன்ன படம்தான் சவரக்கத்தி.

மங்காவை எனக்கு ரொம்ப பிடிச்சிடுச்சி… நீ ஜெயிலுக்கு போய் இருக்கியா.. எல்லாரும் பார்க்கறப்ப கக்கூஸ் போய் இருக்கியா…??? என்று கேட்கும் இடத்திலும் சரி பெத்த நைனாவை அடிக்காமல் திட்டி பக்கத்தில் அடித்து கத்தும் காட்சிகளில் மிஷ்கின் மிளர்கின்றார்.

ராம்.. இந்த படம்தான் நடிகர் என்ற உணர்வை எனக்கு கொடுத்த படம்.. அவ்வளவு அற்புதமாக மிகையில்லாத எதார்த்த நடிப்பை வழங்கி இருக்கின்றார்.. மண்ணில் இருந்து பூழுதி வரை பொரட்டி எடுத்து இருக்கின்றார்கள்… மனுஷன் பின்னி இருக்கார்.. வாழ்த்துகள் ராம்.

பூர்ணா நிறைய பழமொழி சொல்கின்றார்.. ஆனால்.. கொஞ்சம் அவர் ஒவ்வாமை ஏற்படுத்துகின்றார் என்பதை மறுக்க முடியாது என்றாலும்… வயிற்று பிள்ளை தாச்சியாக மருத்துவமனையில் மதில் தாண்டும் காட்சியில் நடிப்பில் பின்னுகின்றார்..
நெகிழ்ச்சியான காட்சிகள் படம் நெடுகிலும் இருக்கின்றன.

பூர்ணாவை ஸ்டெச்சரி வைத்து அழைத்து செல்லும் ரவுடி கூட்டம்…

சங்கீதா பாலன் கால்களை பிடிக்கும் இடம்.
ராம் பையன் எதிரில் அடி வாங்காமல் லைப் இஸ் பியூட்டிபுல் போல சந்தோஷமாக குதிப்பது என்று அசத்தி இருக்கின்றார்கள்..

ராம் சிக்னலில் டேய் நீங்க இன்னுமாடா போகலன்னு கத்தும் போது மிஷ்கின் கத்தி சிரிப்பை வரவழப்பதில் இருந்து குஞ்சி கடி வாங்கி கடைசி பிரேம் வரை அவர் அங்கேயே பிடித்துக்கொண்டு ஓடுவது வரை… அசத்தி இருக்கின்றார்கள்..

கார்த்திக் ஒளிப்பதிவு நிறைவு.. மிஷ்கின் நடந்து செல்லும் அந்த கடைசி காட்சி பிரேமும் லைட்டிங்கும் அருமை..

அரோல்கரோலி பின்னனி இசையும் மிஷ்கினின் சவரக்கத்தி பாடலும் செமை.

ஒரு படம் பர்ஸ்ட் ஆப் சட்டுன்னு முடிஞ்ச பீல் வந்தா என்னை பொருத்தவரை அது பாதி சக்சஸ்… உதாரணத்துக்கு சண்டக்கோழி திரைப்படம் முதல் பாதி எப்ப ஆரம்பிச்சி எப்ப முடிஞ்சிதுன்னே தெரியாது.. அது போலத்தான் இந்த படமும்..

ஆதித்யாவுக்கு இன்னும் உயரங்கள் தொட ஜாக்கிசினிமாஸ் வாழ்த்துகின்றது… லோ பட்ஜெட்டில் பெரிய விளம்பரம் இல்லாமல் 2018 ஆம் ஆண்டின் முதல் வெற்றிபடம் என்ற பெருமையை சவரக்கத்தி பெருகின்றது..

ஜாக்கிசினிமாஸ் இந்த திரைப்படத்துக்கு 4/5 மதிப்பெண் வழங்கி பார்த்தே தீரவேண்டிய திரைப்படம் என்று பரிந்துரைக்கின்றது.

பிரியங்களுடன்
ஜாக்கிசேகர்.

https://www.youtube.com/watch?v=nsdEby7MfIE