தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகரான தளபதி விஜய் பற்றிய புத்தகம் ஒன்று “விஜய் ஜெயித்த கதை ” என்ற பெயரில் கடந்த ஜனவரி மாதம் வெளியானது.
இந்த புத்தகத்தை எழுத்தாளர் சபீதா ஜோசப் என்பவரால் எழுதப்பட்டு, அனைவராலும் இப்புத்தகம் வாங்கி படிக்கப்பட்டது.
நாளை நமதே எனும் புத்தகக் கண்காட்சி நெல்லையில் நடைபெற்றது.இதில் தமிழகத்தில் சரித்திரம் படைத்த தலைவர்களின் புத்தகத்திற்க்கு மத்தியில் தளபதி விஜயின் திரையுலகப் பயணம் பற்றிய “விஜய் ஜெயித்த கதை” புத்தகம் வைக்கப்பட்டிருந்தது.
இந்த புத்தகத்தில் தளபதி விஜயின் 25 ஆண்டுகால திரையுலக பயணமான 1992 ல் வெளியான நாளைய தீர்ப்பு படத்திலிருந்து சமீபத்தில் வெளியான மெர்சல் படம் வரை, அவர் கடந்து வந்த வெற்றி பயணத்தை பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது.