கார்த்திக், கவுதம் கார்த்திக், ரெஜினா கசன்றா மற்றும் வரலக்ஷ்மி சரத்குமார் ஆகியோர் நடிப்பில் பரபரப்பாக நடந்து கொண்டிருக்கும் ‘Mr.சந்திரமௌலி’ படத்தின் படப்பிடிப்பு தளத்திற்கு தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தலைவரும் தென்னிந்தியா நடிகர் சங்கத்தின் செயலாளருமான திரு.விஷால் அவர்கள் வந்து படக்குழுவினரை சந்தித்து அவர்களது வேகமான மற்றும் சிறந்த பணியை பாராட்டியுள்ளார். திட்டமிட்டபடி படப்பிடிப்பை சிறப்பாக நடத்துவதும், ரிலீஸ் தேதியை தற்பொழுதே ஏப்ரல் 27 என அறிவித்திருப்பதும் இயக்குனர் திரு மற்றும் தயாரிப்பாளர் தனஞ்செயன் அவர்களது அருமையான திட்டமிடுதலுக்கு சான்றாகும் என விஷால் கூறியுள்ளார். இதே போல் தமிழ் சினிமாவின் மற்றவர்களும் சிறப்பாக திட்டமிடவேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார்.