நண்பர் தீபா ஜானகிராமன் மென்சுரல் கப் பற்றி ஒரு பதிவு எழுதி இருந்தார்…ஆண்களே உங்களுக்கு தெரிந்த பெண்களுக்கு இது பற்றிய அறிமுகத்தை செய்யுங்கள் எனும் பதத்தில் எழுதி இருந்தார்…
என்னை சார்ந்த அத்துனை பெண்களுக்கும் இந்த வீடியோ பதிவாக வெளியிட்டு இருக்கறேன்… வேறு யாராவது ஒரு ஆண் பார்த்து அதை அவன் மனைவி தோழி இடத்தில் இது பற்றி பேசினாலும் அதுவே இந்த வீடியோவுக்கான வெற்றியும் கூட..
படிக்கையில் வியப்பாக இருந்தது… சானிட்டரி நேப்கினை காட்டிலும் இந்த மென்சுரல் கப் ரொம்ப ரொம்ப ஹைஜனிக்கானது என்பது புரிந்து போனது… எல்லாவற்றையும் விட டிஸ்போஸ் செய்வது வெகு எளிது… திரும்ப திரும்ப யூஸ் செய்யலாம் என்பது ஆச்சர்யமான விஷயம்…
நான்கு ஐந்து வருடங்கள் முன்பே இது சந்தைக்கு வந்து விட்டாலும் பொதுவெளியில் இது பற்றி பெரிதாக யாரும் பேசியதாக தெரியவில்லை… யாரவது ஒரு பெண்… இதனை எளிய தமிழில் விளக்கி வீடியோ போட கூட நிறைய யோசனைகளை உருவாக்கி வைக்கும் சமுகம் நம் சமுகம்… நல்ல விஷயம் என்பதால் நானே களத்தில் இறங்கிவிட்டேன்.
அப்ப எல்லாம் துணிதான்… அம்மா யூஸ் பண்ணுவாங்க… கொல்ல புறவேலியில் அது காயும் மொட மொடப்பா வேற இருக்கும்… அது என்ன மாதிரியான உறுத்தலை அம்மாவுக்கு கொடுத்து இருக்கும்ன்னு இன்னைக்கு உணர முடியுது.
அப்புறம் பேட்…., டெம்பான்… இப்ப மென்சுரல் கப்..
பாத்ரூம் போய் பேட் மாத்திட்டு அந்த ரத்தகறை உள்ள பேடை அப்படியே பக்கதில் உள்ள டஸ்ட்பீனில் போட வேண்டும் … சப்போஸ் சின்ன குப்பை தொட்டி இல்லையென்றால் ஒரு பேப்பரில் சுற்றி சின்ன கேரிபேகில் போட்டு பேகில் வைத்து எடுத்து வந்து குப்பையில் போட வேண்டும்… அவங்க வீட்டு குப்பையை குப்பை தொட்டி வரை குப்பையை எடுத்து வந்து குப்பை தொட்டியில் போடாமல் குப்பை தொட்டிக்கு வெளியே வீசி எரியும் எவன் எங்கேடு கெட்ட எனக்கு என்ன..?? என் வீடு சுத்தமா இருந்தா போதும் என்ற இந்திய மன நிலைதான். நிறைய பேர் டாய்லட் பிளஷ்ஷில் போட்டு செல்கின்றார்கள்…
மிக முக்கியமாக அலுவலகம் மற்றும் அப்பார்ட்மென்டுகளில் உள்ள பெண்கள் இந்த செயலை செய்கின்றார்கள்… செப்டிக் டெங்க் எடுக்கும் போது பார்த்தா எக்க செக்க பேட்ங்க மெதந்துகிட்டு இருக்கும்..
பட், இந்த மென்சுரல் கப்ல அந்த பிரச்சனை இல்ல… அதை உங்க வெஜெய்னாவுல பொருத்திக்கிட்டா… பிளட் அதுலேயே சேகரமாகிடும்.. அதனை எடுத்து டாய்லட்ல ஊத்திட்டு…. திரும்ப அதனை அலம்பி மீண்டும் யூஸ் பண்ணிக்கலாம்..
பெண்களுக்கு இருக்கும் மிக முக்கிய குழப்பம்… சிறுநீரும் ரத்தமும் ஒரே வழியில்தானே வரும்.. ஒன்னுக்கு போகும் போது இதனை எடுத்துட்டு வெச்சிட்டு போவனுமா என்பதே.. இல்லை.. ஆண்டவன் தனி தனியா வழி வச்சி இருக்கான்..
அதனை சிபோன்று அழுத்தி உதிரம் வரும் வழியில் பொருத்திக்கொண்டால்… எந்த பிரச்சனையும் இல்லை… ஒரு சில பொம்பளை பசங்க. காலையில் வைத்த பேடை டிஸ்போஸ் பண்ண சோம்பேறிதனப்பட்டுகிட்டு பேட்களை மாற்றுவதே இல்லை. இது அந்த பிரச்சனையை குறைக்கும்… அதே போல ஓவர் புலோவுக்கு மென்சுரல் கப் நல்ல தீர்வும் கூட…
இந்தியாவுல 58 கோடி பெண்கள் இருக்காங்க…
சராசரியா 15 வயசுல இருந்து 45 வயசுவரைக்கும் மென்சுரல் மாத பிரச்சனையை சந்திப்பாங்க.. சராசரியாக 30 வருஷம்ன்னு வச்சிக்கோங்க..
30•12 =360 …. சோ 360 மாசம்… ஒரு மாசத்துக்கு ஒரு பொண்ணு சானிட்டரி பேட்க்கு 50 ரூபாய் செலவு பண்ணாலும்… 360 மாசத்துக்கு 18 ஆயிரம் ஆவும்… அப்புறம் ஓவர் புலோ , பேட் கடன் கொடுக்கறதுன்னு ஒரு பொண்ணு வாழ்நாள்ல சராசரியா 20 ஆயிரம் ரூபா சானிட்டரி பேடுக்கு செலவு செய்வா…
இதுல அந்த அளவுக்கு செலவு இல்லை…
மென்சுரல் கப் 1000 இருந்து 1500 ருபாய் விலையில் சந்தையில் கிடைக்கின்றது… நான்கைந்து வருஷத்துக்கு அதனை யூஸ் செய்யலாம் என்பதே….
எல்லாவற்றையும் விட பேடை டாய்லட் பிளஷ்ஷில் போடுவது போல இந்தனை போட தேவையில்லை… அப்பார்ட்மென்ட் மற்றும் அலுவலகங்களில் ஏற்படும் டீரெய்னேஜ் குழாய் அடைப்புக்கு நீங்களும் ஒரு காரணமாக இருக்க தேவையில்லை என்பதே..
பிரியங்களுடன்
ஜாக்கிசேகர்.
30/01/2018
https://www.youtube.com/watch?v=aV5HuJPAg80