மாநில அரசின் அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் இருக்கும் கோவில்களில் சாமி சிலைகள் கடத்தப்படுகின்றன. இதில் அலட்சியமாக இருக்கும் மாநில அரசைக் கண்டித்து மத்திய அமைச்சர் ஜெயராம் போராட்டம் நடுத்துகிறார். இதனால் ஆட்சிக்கு ஆபத்து வருமோ என்கிற அச்சத்தில் ஜெயராமை, அரசியலை விட்டே விரட்டியடிக்க ஓடவிடவேண்டும் என்று திட்டம் தீட்டுகிறார் மாநில முதலமைச்சர். அதற்காக, ஜெயராம் மீது ஊழல் குற்றச்சாட்டு சுமத்துவதற்காக, ஐ.ஏ.எஸ். அதிகாரியான ஆஷா சரத்தை பயன்படுத்துகிறார். ஜெயராம் மீது ஊழல் குற்றம் சுமத்த அவரிடம் பர்ஷனல் செகரட்ரியாக இருந்த ஐ.ஏ.எஸ். அதிகாரியான அனுஷ்காவை, ஜெயராமுக்கு எதிராக திருப்பிவிட திட்டம் தீட்டுகின்றனர். காதலன் உன்னி முகுந்தன் கொலை வழக்கில் சிறையில் இருக்கும் அனுஷ்காவை விசாரணைக் கைதியாக வெளியே கொண்டுவரும் ஆஷா, அனுஷ்காவை ஆள்நடமாட்டம் இல்லாத பாகமதி பங்களாவில் வைத்து விசாரிக்கிறார்.
பாகமதி பங்களாவில் முதலில் யாரோ தன்னை பயமுறுத்துவது போன்று உணரும் அனுஷ்கா. ஒரு சில நாட்களில் தான் அந்த அரண்மனையில் வாழ்ந்த அரசி பாகமதி என்றும், பாகமதியின் உடை மற்றும் அங்கிகளை எடுத்து அணிந்தபடியும் அங்குள்ளவர்களை பயமுறுத்துகிறார். இறுதியில் அங்கு என்ன நடந்தது? பாகமதி யார்? ஜெயராம் என்ன ஆனார்? என்பது மீதிக்கதை.
அனுஷ்கா சாஞ்சலாவாக இருந்து பாகமதியாக மாறும்போது நடிப்பில் மிரட்டியிருக்கிறார். சிபிஐ அதிகாரியாக வரும் ஆஷா சரத் மிரட்டலான அதிகாரியாக நடித்திருக்கிறார். அசிஸ்டண்ட் கமிஷனராக நடித்திருக்கும் முரளி சர்மாவும் நன்றாக நடித்திருக்கிறார். எஸ்.தமனின் இசையும், ஆர்.மதியின் ஒளிப்பதிவும் ரசிக்க வைக்கின்றன.
– ஜாக்கி சினிமாஸ் விமர்சன குழு