“நாடோடிகள் – 2” திரைப்படத்தின் போட்டோ ஷுட் திருவள்ளூர் அருகே நாளை துவங்குகிறது

2009ம் ஆண்டு இயக்குநர் சமுத்திரக்கனி இயக்கத்தில் சசிகுமார் நடிப்பில் வெளிவந்த நாடோடிகள் திரைப்படம் மாபெரும் வரவேற்பைப் பெற்று வசூலிலும் சாதனை படைத்தது.

இந்த வெற்றியின் தொடர்ச்சியாக மெட்ராஸ் எண்டர்ப்ரைசஸ் எஸ். நந்தகோபால் தயாரிப்பில் “நாடோடிகள் – 2” திரைப்படத்தின் படப்பிடிப்பு மதுரை சுற்று வட்டார பகுதிகளில் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. இதில் அஞ்சலி, பரணி, அதுல்யா, எம். எஸ். பாஸ்கர், நமோ நாராயணன், ஞானசம்பந்தம், துளசி, ஸ்ரீரஞ்சனி, சூப்பர் சுப்புராயன் ஆகியோர் நடிக்கவுள்ளனர்… இப்படத்தின் போட்டோ ஷுட் திருவள்ளூர் அருகே (26/01/18) அன்று நடைபெறுகிறது… இசை -ஜஸ்டின் பிரபாகரன், ஒளிப்பதிவு – ஏகாம்பரம், கலை – ஜாக்கி, எடிட்டிங் – ரமேஷ், பாடலாசிரியர்- யுகபாரதி, சண்டை பயிற்சி- திலீப் சுப்புராயன், நடனம் – திணேஷ், ஜானி, தயாரிப்பு மேற்பார்வை – சிவசந்திரன். மற்ற நடிகர், நடிகைகள் தேர்வு நடைபெறுகிறது.

Previous articleNimir Tamil Movie Review By Jackiesekar
Next articleAchamillai Achamillai Official Trailer