பரபரப்பான படப்பிடிப்பில் மன்சூரலிகானின் “ கடமான்பாறை “

பிரபு நடித்த வேலை கிடைச்சுருச்சு படத்தின் மூலம் நடிகராக அறிமுகமான மன்சூர் அலிகான். கேப்டன் பிரபாகரன் படத்தின் மூலம் நட்சத்திர அந்தஸ்தை அடைந்தார். அதற்கு பிறகு எல்லா மொழிகளிலும் 250 படங்களுக்கு மேல் நடித்ததுடன் ஏராளமான படங்களை தயாரித்தும், இயக்கியும் இருக்கிறார்.

அடுத்ததாக அவரது ராஜ்கென்னடி பிலிம்ஸ் பட நிறுவனத்தின் சார்பாக எழுதி இயக்கி, தயாரிக்கும் படத்திற்கு “ கடமான்பாறை “ என்று பெயரிட்டுள்ளார்.

இந்த படத்தில் இளம் கதாநாயகனாக மன்சூர்ரலிகானின் மகன் அலிகான் துக்ளக் அறிமுகமாகிறார். இந்த படத்தில் மன்சூரலிகான் சிங்கம், புலி, கரடி சிறுத்தை மாதிரி வாழும் மனிதனாக நடிக்கிறார்.
கதாநாயகியாக அனுராகவி நடிக்கிறார். இன்னொரு நாயகியாக ஜெனி பெர்ணாண்டஸ் நடிக்கிறார். மற்றும் சிவசங்கர், சார்மிளா, கனல்கண்ணன், முல்லை, கோதண்டம், கலக்க போவது யாரு பழனி, பயில்வான் ரங்கநாதன் ஆகியோர் நடிக்கிறார்கள்.

படம் பற்றி இயக்குனர் மன்சூரலிகானிடம் கேட்டோம்…

கலூரியில் படிக்கும் இளைஞர்கள் இப்போது வழிமாறி போகிறார்கள். அப்பா அம்மா, ஆசிரியர் என யார் சொன்னாலும் எதையும் அவர்கள் பொருட்படுத்துவது கிடையாது.

செல்போன், மார்டன் டெக்னாலஜி அவர்களை தவறான வழிக்கு கொண்டு போகிறது. அப்படி தவறான வழியில் போகும் இளைஞர்களின் வாழ்க்கை பாதிக்கப் பட்டு எப்படி அமைகிறது என்பதே இந்த படத்தின் கரு. நகைச்சுவை கலைந்த திரில்லர் படமாக கடமான் பாறை உருவாகி வருகிறது.

படப்பிடிப்பு ஆந்திரா மாநிலத்தில் அடர்ந்த காட்டுப் பகுதிகளிலும், பாண்டிசேரி, சென்னை போன்ற இடங்களில் நடைபெற்றுள்ளது.

இந்த படத்தில் இடம்பெறும் இரண்டு பாடல்களுக்கு நடனமாட நாயகன் அலிகான் துக்ளக்கிற்கு இணையான இன்னொரு நாயகியை தேடிக்கொண்டிருக்கிறோம். விரைவில் அந்த பாடல்களுக்காண படப்பிடிப்பு நடைபெறும் என்றார் மன்சூரலிகான்

Previous articlePakka Movie Stills
Next articleMuthirikkadu First Look Launch Stills