தறியுடன்” நாவல் “ சங்கத்தலைவன் “ என்ற பெயரில் திரைப்படமாகிறது

தமிழ்ச்சூழலில் சமீபத்தில் வெளியான ஒரு முக்கிய, சமூக அக்கறையுள்ள நாவல் பாரதிநாதனின் “ தறியுடன் “. நாவலாசிரியரின் சொந்த அனுபவங்களின் அடிப்படையில், தமிழகத்தின் மேற்கு மாவட்டங்களான சேலம், கோவை, ஈரோடு மாவட்டங்களின் முக்கிய தொழிலான விசைத்தறித்தொழில் மற்றும் அத்தொழிலாளர்களின் பிரச்சனையை ஒரு முற்போக்கு இயக்கத்தின் பின்னணியில் விவரிக்கிறது இந்த நாவல். இந்த நாவலை இயக்குனர் மணிமாறன் இயக்க, சமுத்திரக்கனி, கருணாஸ், அறம் படத்தில் நடித்த சுனுலட்சுமி மற்றும் விஜய் TV தொகுப்பாளினி ரம்யா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க, GRASSROOT FILM COMPANY சார்பில் இயக்குனர் வெற்றிமாறன் தயாரிக்கிறார். இம்மாதம் 22 ந்தேதி இப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் தொடங்குகிறது.

Previous articleமலேசியாவில் பரவசமானேன் – தேவிஸ்ரீபிரசாத்
Next article‘ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது’ படக்குழுவினரை ஊக்குவிக்க ஓடோடி வந்த சிவகார்த்திகேயன்