தமிழக பேருந்து கட்டண உயர்வுக்கு அரசு தெரிவிக்கும் காரணத்தை விட செய்தி வெளியிடும் ஜால்ரா ஊடகங்கள் ஒரு படி மேலே போய் விடுகின்றது…
ஆறு ஆண்டுகளுக்கு பிறகு பேருந்து கட்டண உயர்வு என்று செய்தி விடுகின்றார்கள்…
அதாவது ஆறு வருஷமாச்சி இப்பதான் ஏத்துறாங்கப்பா என்று சப்பை கட்டு கட்டும்செயல்தான்..
மக்களால் நான் மக்களுக்காகவே நான் என்று பேசிய ஜெயலலிதா பாதி பாதிக்கட்டண உயர்வை அறிவித்தார்… ஆனாலும் ஓட்டை உடைசலோடு பேருந்துகள் ஓடிக்கொண்டு இருக்கின்றன…
அதெல்லாம் விடுங்கள்.. ஒரே நாள் இரவில் பேருந்து கட்டணத்தை ஏற்றி அப்படி என்ன சாதிக்க போகின்றார்கள்… மக்கள் எல்லோருக்கும் அறிவித்து விட்டு ஒரு வாரம் கழித்து ஏற்றினால்தான் என்ன.. அந்த அளவுக்கு கொஞ்சம்கூடவா மனதில் ஈரம் இருக்காது…??
https://www.youtube.com/watch?v=dS07XCzKTUA