விக்னேஷ் சிவன் உங்கள் மாணவரா? என்று கேட்பார்கள்… ஆம் என்று சொன்னால்… அப்ப விக்னேஷ் நயன்தாரா கல்யாணத்துக்கு உங்கள் கூப்பிடுவாரு இல்லை…?? என்று அதீத ஆர்வத்தோடு கேள்வி எழுப்புவார்கள்..
விக்னேஷ் சிவன் எனது மாணவர் அவ்வளவுதான்… சரியாக ஒன்பது வருடத்துக்கு பிறகுதான் நேரில் பார்த்து பேசிக்கொண்டோம்.. அதற்கு முன் ஒன்றின்டு முறை போனில் பேசி இருக்கிறேன்..
அவ்வளவுதான்….
நண்பர் ரவிச்சந்திரன் சிங்கபூரில் தகவல் தொழில் நுட்ப துறையில் பெரிய ஆள்.. அவரது புத்தக வெளியீட்டு விழாவில் அவரது அரசு பள்ளி ஆசிரியரை அழைத்து சிறப்பு செய்தார்… அப்போது அந்த வாத்தியார் பேசும் போது.. ரவி எனது மாணவர்.. அவர் ஜெயித்து விட்டார்.. அதற்காக நான் மார்தட்டிக்கொள்ள முடியாது..
ரவி படிச்ச பள்ளிக்கூடத்துல நான் வாத்தியாரா இருந்தேன்.. அவ்வளவுதான்.. அதே போலத்தான் விக்னேஷ் சிவன் படிச்ச கல்லுரியில் நான் வாத்தியார் அவ்வளவுதான்…
மத்தபடி இந்த வெற்றி எல்லாம் விக்னேஷின் விடாமுயற்சி… அதில் என் பங்கு ஏதும் இல்லை…அது மட்டுமல்ல.. கல்லூரியில் எனது வகுப்பு மாணவர்களுக்கு நிறைய திரைப்படங்கள் அறிமுகபடுத்தி இருக்கிறேன்…
இந்த வெற்றி விக்னேஷ் சிவன் என்ற தனி நபரின் உழைப்பாள் சாத்தியம் ஆகி இருக்கின்றது… சார் அவர் உங்க மாணவர்தானே என்னை அசிஸ்டென்டா சேர்த்து விடுங்க என்று கேட்பது.. கல்யாத்துக்கு கூப்பிடுவரா? காது குத்திக்கி கூப்பிடுவாரா என்று கேட்பது எல்லாம் என்னை பொருத்தவரை கடுப்பு கௌப்பும் கேள்விகள்..
என்னிடம் அவன் நம்பர் இல்லை என்பதே உண்மை.
விக்னேஷ் சிவன் எனது மாணவர்தான்… அதனால் என்ன???
பிரியங்களுடன்
ஜாக்கிசேகர்
#tsk #vigneshsivan #விக்னேஷ்சிவன் #நயன்தாரா #நயன் #தானாசேர்ந்தகூட்டம்
தானா சேர்ந்த கூட்டம் வெற்றியடைய வாழ்த்துகள்.
https://www.youtube.com/watch?v=h1UaXOftYcY