இன்று தொடங்கும் சென்னைப் புத்தகக் காட்சியை வாழ்த்துகிறேன். வாசித்தல் என்ற ஞானப் பயிற்சிக்கு இந்தப் புத்தகக் காட்சி ஒரு பொற்கூடமாகும். படைப்பாளர் – பதிப்பாளர் – வாசகர் என்ற முக்கூட்டுப் பாசனத்தில் தமிழும் கலையும் தழைத்தோங்கும் என்று நம்புகிறேன். வளரும் தலைமுறையே வாசிக்க வா என்று அன்போடு வரவேற்போம். ஓர் அறிவுப் பரம்பரை செழுமையுறட்டும்.
இந்தப் புத்தகக் காட்சி மூலம் கிட்டும் என் நூல்களின் மொத்த விற்பனைத் தொகையை ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் அமையவிருக்கும் தமிழ் இருக்கைக்கு வழங்கப்போகிறேன்.