பொங்கல் முதல் “ஒரு நிமிஷம் தலை சுத்தும்” – தாதா87 படத்தின் ப்ரத்யேக பாடல்

‘கலை சினிமாஸ்’ பிரம்மாண்ட தயாரிப்பில் சாருஹாசன், சரோஜா (நடிகை கீர்த்தி சுரேஷ் பாட்டி), ஜனகராஜ் நடிப்பில் விஜய் ஸ்ரீ இயக்கத்தில் உருவாகி வரும் படம் “தாதா 87”.

“தாதா 87” படத்தின் டீசர் வெளியான நாள் முதலே இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு கூடியுள்ளது.

மேலும் ரசிகர்களுக்கு ஒரு விருந்தாக “ஒரு நிமிஷம் தலை சுத்தும்” என்ற தலைப்பில் தாதா 87 படத்தில் ஒரு அசத்தலான promotion song இடம் பெற்றுள்ளது. இப்பாடலை இப்படத்தின் இயக்குநர் VIJAY SRI G எழுதியுள்ளார். நடிகர் ஐனகராஜின் மகன் நவின் ஐனகராஜ் இப்பாடலை பாடியுள்ளார். லியாண்டா் லீ இசையில் உருவான இப்பாடல் பொங்கல் விருந்தாக ரசிகர்களுக்கு அளிக்கப் படக்குழு திட்டமிட்டுள்ளது.

விருவிருப்பாக இப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகின்றது. பிப்ரவரி 2018ல் தாதா 87 படத்தை வெளியிடத் தயாரிப்பு நிர்வாகம் முடிவெடுத்துள்ளது.

Previous articleBhaagamathie Official Trailer
Next articleSuperstar Rajinikanth Meet Malaysia PM Stills