கேங்ஸ்டர் அம்சங்கள் கலந்த காதல் திரில்லர் படம் – வஞ்சகர் உலகம்

சமீபகாலமாக பல படங்கள் ‘திரில்லர்’ வகையில் வந்தாலும் ஒரு சில படங்களே சினிமா ரசிகர்களுக்கு நிஜமான த்ரில்லை தந்துள்ளன. புதுமுக இயக்குனர் மனோஜ் பீதா இயக்கத்தில் உருவாகியிருக்கும் காதல் திரில்லர் படம் தான் ‘வஞ்சகர் உலகம்’. இவர் இயக்குனர் S P ஜனநாதனிடம் உதவி இயக்குனராக பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படத்தில் பல புது முக நடிகர்களோடு சில அனுபவம் வாய்ந்த நடிகர்களும் நடித்துள்ளனர்.

‘வஞ்சகர் உலகம்’ குறித்து இயக்குனர் மனோஜ் பீதா பேசுகையில் , ” இது ஒரு கேங்ஸ்டர் அம்சங்கள் கலந்த காதல் திரில்லர் படம். இயக்குனர் விக்னேஷ் சிவனிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்த எனது நண்பர் விநாயக் தான் இப்படத்தின் கதையாசிரியர். ‘வஞ்சகர் உலகம்’ படத்தின் கதை மற்றும் திரைக்கதை தமிழ் சினிமா ரசிகர்களுக்கு முற்றிலும் ஒரு புது அனுபவமாக நிச்சயம் இருக்கும். படத்தின் ஒவ்வொரு நடிகரும் தனது கதாபாத்திரத்தில் அசத்தியுள்ளனர் . குறிப்பாக குரு சோமசுந்தரத்தின் நடிப்பாற்றலை கண்டு வியந்தேன். ஒரு கேங்ஸ்டர் வேடத்தில் அவர் இப்படத்தில் நடித்துள்ளார். ஒவ்வொரு காட்சியையும் அவர் கையாண்டு அசத்திய விதம் நான் அவரிடம் எதிர்பார்த்ததை விட பல மடங்கு பிரமாதமாக இருந்தது. ஒரு குறிப்பிட்ட 5-6 நிமிட கட்சியை ஒரே டேக்கில் ஓகே செய்து எல்லோரையும் மிரளவைத்தார் அவர். அவரது அபார நடிப்பாற்றலால் கதையில் நாங்கள் சில மாறுதல்களை செய்யவேண்டியிருந்தது. மெக்ஸிகோ நாட்டை சேர்ந்த ராட்ரிகோ தான் இப்படத்தில் ஒளிப்பதிவாளர். அவரது சிறந்த ஒளிப்பதிவு நிச்சயம் தமிழ் சினிமா உலகில் பேசப்படும். நடிகர் விசாகன் வணங்காமுடியின் கதாபாத்திரமும் அவரது நடிப்பும் இப்படத்தின் முக்கிய அம்சங்களில் ஒன்றாக நிச்சயமாக இருக்கும். எனக்கு மிகவும் திருப்தியும் சந்தோஷமும் அளிக்கும் வகையில் இப்படம் வந்துள்ளது. படத்தின் Post Production பணிகள் மிக வேகமாக நடந்து வருகின்றன. படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் மிக விரைவில் வெளியிட திட்டமிட்டுள்ளோம் ”

இப்படத்தை மஞ்சுளா பீதா தயாரித்துள்ளார். புதுமுகம் சிபி கதாநாயகனாகவும் , அனிஷா அம்ப்ரோஸ் மற்றும் சாந்தினி தமிழரசன் கதாநாயகிகளாகவும் நடித்துள்ள இப்படம் சாம் CS இசையில், ஆண்டனியின் படத்தொகுப்பில், A.ராஜேஷின் கலை இயக்கத்தில் , ‘Stunner’ சாமின் சண்டை இயக்கத்தில் உருவாகியுள்ளது.
CAST LIST:

GURU.SOMASUNDARAM

CIBY BHUVANA CHANDRAN

VISHAGAN

ANISHA AMBROSE

CHANDINI

AZHAGAM PERUMAL

JOHN VIJAY

HARISH PEREDDY

RAVINDER

VASU VIKRAM

“pitchaikaran” MOORTHY

SCISSORS MANOHAR
JAIPRAKASH RADHAKRISHNAN

Crew

SCREENPLAY – DIRECTOR – MANOJ BEEDHA

DOP – RODRIGO DEL RIO HERRERA/ SARAVANAN RAMASAMY

MUSIC – SAM C.S

EDITOR – ANTHONY

ART – A.RAJESH

STUNTS – “Stunner”SAM

WRITER – VINAYAK.V

SOUND MIX – T.UDHAYAKUMAR

PRODUCTION CONTROLLER – K.MANIVARMA

ASSOCIATE DIRECTOR – RAMESH MARABU

PRODUCTION EXECUTIVE – T.GANESHAN

COSTUME DESIGNER – PRAVEEN RAJA

COSTUMER – M.MOHAMMED SUBIER

MAKEUP – CH.VENU

P.R.O – SURESH CHANDRA

STILLS – MUTHUVEL

DESIGNER – KABILAN

KNACK STUDIOS

CONSULTANT PRODUCER – PRASANNA JK
PRODUCER – B.V.MANJULA or MANJULA BEEDHA

Vanjagar Ulagam (1) Vanjagar Ulagam (2) Vanjagar Ulagam (3) Vanjagar Ulagam (4)