பல நட்சத்திரங்களை இசையால் ஆட்டுவித்தவர் நடனம் ஆடும் ப்ரோமோஷனல் பாடல்

தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவர் யுவன் ஷங்கர் ராஜா. கடந்த இருபது ஆண்டுகளாக தன் இசையால் பலரையும் ஆட வைத்துக் கொண்டிருந்த யுவன் தற்போது ராஜா ரங்குஸ்கி படத்தின் புரமோஷனுக்காக தானே பாடிய ஒரு பாடலுக்கு நடனமும் ஆடியிருக்கிறார். யுவனின் இசையே படத்தின் மிகப்பெரிய ஹைலைட்டாக இருக்கும் நேரத்தில் தன் நண்பர் மெட்ரோ சிரஷுக்காக பாடல் வீடியோவில் தோன்றி அவரே நடனம் ஆடியிருப்பது பாடல் வைரல் ஆக நிச்சயம் உதவும்.

“யுவனின் எனர்ஜி எல்லோருக்கும் தெரிந்ததே, தன் துள்ளலான இசையால் அதை நிரூபித்தவர் தான் அவர். யுவன் தன் ஆன்மாவில் இருந்து இசையமைத்த அந்த புரமோஷனல் பாடலுக்கு நடனமாட துடிப்பான, உற்சாகமான ஒருவர் தேவைப்பட்டார். ஒட்டுமொத்த குழுவும் யுவனை கேட்க, அவர் நீண்ட தயக்கத்துக்கு பிறகு ஒப்புக் கொண்டார். அப்படிப்பட்ட ஒரு நட்சத்திரம் அந்த பாடலில் தோன்றி நடனமாடுவது எங்களுக்கு மிகுந்த உற்சாகத்தையும், மகிழ்ச்சியையும் அளிக்கிறது என்று பெருமிதத்தோடு பேசுகிறார் இயக்குனர் தரணிதரன்.

மெட்ரோ சிரிஷ், சாந்தினி தமிழரசன் ஜோடியாக நடிக்க, தரணிதரன் இயக்கும் இந்த ‘ராஜா ரங்குஸ்கி’ படத்தை வாசன் ப்ரொடக்‌ஷன்ஸ் மற்றும் பர்மா டாக்கீஸ் தயாரிக்கிறது.

Previous articlePress Release From All India Rajinikanth Fans Association
Next articleDirector Sarkunam announces his next with Madhavan