வணக்கம்.
பொது வெளிகளில் என்னுடைய பேச்சிலும் பேட்டியிலும் நான் சொல்லாத செய்திகளைச் சொல்லியதாகப் பதிவிடுவதில் சில அன்பர்கள் ஆர்வம் காட்டுகிறார்கள். அது உண்மை என்று கருதிவிடும் அபாயமும் இருக்கிறது. அதனால் என்னுடைய சுட்டுரைப் பக்கத்திலும் என் பெயரில் வெளிவரும் மெய்யான அறிக்கைகளிலும் தொலைக்காட்சியின் உண்மையான பதிவுகளிலும் நான் சொல்லியது மட்டுமே உண்மை என்று தமிழ் உலகம் நம்பும் என்று நம்புகிறேன்.
உண்மைக்கு வெளியே தங்கள் வாக்கியங்களை என் வாக்கியங்களாக வெளியிட்டுக்கொள்ளும் நண்பர்கள் நகைச்சுவைக்காக அப்படிச் செய்திருக்கக்கூடும். அவர்கள்மீது எனக்கு எந்த வகையிலும் வருத்தம் இல்லை. நகைச்சுவைக்கும் ஓர் எல்லை உண்டு என்பதை அவர்களும் அறிவார்கள்; தமிழர்களும் புரிவார்கள்.
நன்றி.