ஜீவா ஷாலினி பாண்டே இணையும் புதியபடம்

ஆல் இன் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் விஜயராகவேந்திரா மிகுந்த பொருட்செலவில் தயாரிக்கும் மூன்றாவது படம். ஜீவா 29 (இந்த படத்திற்கு இன்னும் பெயர் சூட்டப்படவில்லை)

இதில் நடிகர் ஜீவா கதையின் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக அர்ஜுன் ரெட்டி புகழ் நடிகை ஷாலினி பாண்டே நடிக்கிறார். இதற்கு கதை திரைக்கதை வசனம் எழுதி இயக்குகிறார் டான் சாண்டி.

படத்தைப் பற்றி இயக்குநர் பேசும்போது, “ ஹெய்ஸ்ட் காமெடி த்ரில்லர் ஜேனரில் ஜீவா 29 (இந்த படத்திற்கு இன்னும் பெயர் சூட்டப்படவில்லை) உருவாகிறது. இதற்கு விக்ரம் வேதா புகழ் சாம் சி.எஸ் இசையமைக்கிறார். ரூபன் படத்தொகுப்பைக் கவனிக்கிறார். இந்தப் படத்தில் ரசிகர்களை ஆச்சர்யப்படுத்தும் விசயம் ஒன்றும் இடம்பெறுகிறது. படத்தின் முதற்கட்டப் படப்பிடிப்பு அடுத்தமாதம் தொடங்குகிறது.” என்றார்.

ஜீவா நடிப்பில் ஹெய்ஸ்ட் காமெடி த்ரில்லர் படமாக உருவாகும் பெயரிடப்படாத இந்தப் படத்திற்கு இப்போதே ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு ஏற்பட்டிருக்கிறது.

Previous articleUlkuthu Movie Team Celebrates Christmas
Next articleபேயும் பேய்சார்ந்த இடமும் தான் ‘ஆறாம் திணை’!