சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் காலா படத்தின் டப்பிங் இன்று KNACK ஸ்டூடியோவில் தொடங்கியது

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், பா. ரஞ்சித் இயக்கும் படம் காலா. வுண்டர்பேர் பிலிம்ஸ் சார்பில் தனுஷ் தயாரிக்கும் இந்த படம், கபாலி திரைப்படத்திற்கு பிறகு சூப்பர் ஸ்டாரும் – பா.ரஞ்சித்தும் இணையும் படம் என்பதால் மிகுந்த எதிர்பார்ப்பை பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இப்படத்தின் சூட்டிங் முற்று பெற்ற நிலையில், போஸ்ட் புரொடக்ஷ்ன் பணிகளும் துரிதமாக நடைபெற்று வருகிறது. படத்தின் டப்பிங் இன்று சென்னையில் உள்ள KNACK ஸ்டூடியோவில் தொடங்கியது.

இன்று நடைபெற்ற பூஜையில் படக்குழுவினருடன் இயக்குனர் பா.ரஞ்சித் அவர்களும் கலந்து கொண்டார். காலா திரைப்படம் 2018 ஆம் ஆண்டு திரைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நடிகர்கள்:

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், நானா படேகர், சமுத்திரக்கனி, சம்பத், ரவி கேளா, சாயாஜி ஷிண்டே, பங்கஜ் த்ரிபாதி, மிகி மகிஜா, மேஜர் பிக்ரம்ஜித், அருள்தாஸ், சுதன்ஷூ பாண்டே, அரவிந்த் ஆகாஷ், ‘வத்திகுச்சி’ திலீபன், ரமேஷ் திலக், மணிகண்டன், ஹுமா குரேஷி, அஞ்சலி பட்டேல், ஈஸ்வரிராவ், அருந்ததி, சாக்ஷி அகர்வால், நிதிஷ், வேலு, ஜெயபெருமாள், கருப்பு நம்பியார், யதின் கார்கேயர், ராஜ் மதன், சுகன்யா.

தொழில் நுட்பக்குழு:

இயக்குனர் – பா. ரஞ்சித்

இசை – சந்தோஷ் நாராயணன்

ஒளிப்பதிவு – முரளி . ஜி

கலை இயக்கம் – டி.ராமலிங்கம்

படத்தொகுப்பு – ஸ்ரீகர் பிரசாத்

சவுண்ட் டிசைன்ஸ் – ஆண்டனி பி ஜெயரூபன்

கிரியேட்டிவ் டிசைனர் – வின்சி ராஜ்

சண்டைப்பயிற்சி – திலீப் சுப்பராயன்

நடனம் – சாண்டி

ஆடை வடிவமைப்பு – அனு வர்தன், சுபிகா

காஸ்ட்யூம்ஸ் – செல்வம்

ஒப்பனை – பானு பாஷ்யம், ராஜா

ஸ்டில்ஸ் – ஆர்.எஸ்.ராஜா

தயாரிப்பு மேற்பார்வை – எஸ்.பி. சொக்கலிங்கம், ஆர். ராகேஷ்

நிர்வாகத் தயாரிப்பு – எஸ்.வினோத்குமார்

தயாரிப்பு – வுண்டர்பார் பிலிம்ஸ் பிரைவேட் லிமிடெட்

மக்கள் தொடர்பு – ரியாஸ் கே அஹ்மது

Kaala Movie Dubbing Pooja Photos (4) Kaala Movie Dubbing Pooja Photos (11) Kaala Movie Dubbing Pooja Photos (15) Kaala Movie Dubbing Pooja Photos (18)