‘Steeves Corner’ நிறுவனத்தின் படத்திற்க்கு அம்ரேஷ் கணேஷ் இசையமைக்கிறார்

ஒரு படத்திற்கு இசை முதுகெலும்பு போல் ஆகும். அதுவும் ஒரு சரித்திர பின்னணியுள்ள படமென்றால் அதில் இசை மேலும் முக்கியத்துவம் பெரும். பிரம்மாண்டமான தமிழ் படத்தில் பிரபல நடிகை சன்னி லியோன் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார் என்பதே தமிழ் ரசிகர்களுக்கு ஒரு உற்சாகம் தரும் செய்தி ஆகும். இது ஒரு சரித்திர பின்னணியுள்ள படமாகும். போர் காட்சிகள் நிறைந்த இந்த படத்தில் சன்னி லியோன் இதுவரை யாரும் காணாத அவதாரத்தில் தோன்றவுள்ளார். இப்படத்தை V C வடிவுடையான் இயக்குகின்றார் , ‘Steeves Corner’ நிறுவனத்திற்காக பொன்சே ஸ்டீபன் தயாரிக்கின்றார். இந்த படத்தில் பல முன்னணி தொழில்நுட்ப கலைஞர்கள் அசத்தவுள்ளனர். இவர்கள் பற்றிய அறிவிப்பு ஒவ்வொன்றாக வெளியிடப்படும் என கூறப்படுகிறது.தற்பொழுது, இப்படத்தின் இசையமைப்பாளர் அம்ரேஷ் கணேஷ் என அறிவிக்கப்பட்டுள்ளது. ‘மொட்ட சிவா கெட்ட சிவா’ படத்தின் பாடல்கள் மூலம் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றவர் அம்ரேஷ் கணேஷ். ‘பாஸ்கர் தி ராஸ்கல்’, ‘யங் மங் சங்’, ‘கர்ஜனை ‘, ‘சார்லி சாப்ளின் 2’ ஆகிய படங்களுக்கு இவர் இசையமைத்து வருகிறார்.

இந்த பிரம்மாண்ட சரித்திர படம் குறித்து இசையமைப்பாளர் அம்ரேஷ் கணேஷ் பேசுகையில் , ” இயக்குனர் வடிவுடையான் அவர்கள் இந்த படத்தின் கதையை என்னிடம் சொன்னபொழுது வியந்து போனேன். அருமையான கதையம்சம் கொண்ட மிக பிரம்மாண்ட படம் இது. இது போன்ற ஒரு சரித்திர பின்னணியுள்ள படத்திற்கு இசையமைப்பது ஒரு சவாலான காரியமாகும். இப்பட பாடல்கள் ரெக்கார்டிங்கிற்கு வெளிநாடு செல்லவுள்ளோம். பண்டைய கால இசை கருவிகள் பலவற்றை பயன்படுத்தி புது விதமான ஒலியை கொண்டுவரவுள்ளேன் . எல்லோராலும் ரசிக்கப்பட்டு பேசப்படும் பாடல்கள் மற்றும் பின்னணி இசையை அமைக்க முனைப்போட்டுள்ளேன். சன்னி லியோன் முதன்மை கதாபாத்திரத்தில் நடிப்பதால் இந்த படத்திற்கு இந்திய அளவில் ஒரு பெரிய ரீச் கிடைப்பது நிச்சயம். இந்த படத்திற்கு இசையமைக்க மிகவும் எதிர்நோக்கியுள்ளேன்”.

Previous articleAfter A Successful Us Tour, Akhil Is Set To Perform In Hyderabad On The 20th
Next articleChennaiyil Thiruvaiyaru Season 13 Day 2 (19th December) Stills