ஒரு நல்ல நகைச்சுவை படத்தை சினிமா ரசிகர்கள் என்றுமே ஆதரவளித்து கொண்டாடியுள்ளனர். புது முக இயக்குனர் அப்பாஸ் அக்பரின் ‘சென்னை 2 சிங்கப்பூர்’ படத்திற்கு தமிழ் சினிமா ரசிகர்கள் பெரும் வரவேற்பை தந்துள்ளனர்.
இது குறித்து இப்படத்தின் இயக்குனர் அப்பாஸ் அக்பர் பேசுகையில் , ” இப்படத்தின் ரிலீசுக்காக நீண்ட நாட்களாக காத்திருந்தேன். இந்த காத்திருப்பு காலம் மிக கடினமாக இருந்தது. அதிலிருந்து மீண்டு வந்து, படத்தை ரிலீஸ் செய்து, இது போன்ற அருமையான வரவேற்பை பெருவதையே எங்கள் கனவாகவும் பிரார்த்தனையாகவும் இருந்தது. எங்களது இந்த பிரார்த்தனை தற்பொழுது பலித்துள்ளது. ‘சென்னை2சிங்கப்பூர்’ படம் ‘ஹிட்’ என வணிக தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது என்னை பெரும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இதனை ஊர்ஜிதப்படுத்தும் வகையில் எங்கள் படத்திற்கான திரைகள் எண்ணிக்கை உயர்த்தப்பட்டுள்ளது. எண்களின் உழைப்பிற்கும் , நாங்கள் சந்தித்த தடைகளுக்கு மக்கள் தந்துள்ள அபார வரவேற்பு எங்களை சந்தோஷத்தில் ஆழ்த்தியுள்ளது”
‘சென்னை 2 சிங்கப்பூர்’ படம் ஜிப்ரான் இசையில் உருவாகியுள்ளது. இப்படத்தை ‘காமிக்புக் இந்தியா பிரைவேட் லிமிடெட் புரொடக்ஷன்’ நிறுவனம் தயாரித்துள்ளது.