அரவிந்த் சாமி, அமலா பால் இணைந்து நடிக்கும் பாஸ்கர் ஒரு ராஸ்கல் படத்தை இயக்குனர் சித்திக் இயக்குகிறார். மலையாளத்தில் மாபெரும் வெற்றி பெற்ற பாஸ்கர் தி ரஸ்கல் படத்தின் ரீமேக்காக உருவாகி வருகிறது. இப்படத்திற்கு அம்ரேஷ் கணேஷ் இசையமைத்துள்ளார். படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று (13-2-17 அன்று) நடைபெற்றது.
விழாவில் நடிகர் அர்விந்த் சாமி, அமலா பால், இயக்குனர் சித்திக், ரோபோ சங்கர், ஆஃப்தாப்ஷிவ்தசானி, நடிகை மீனா மற்றும் இசையமைப்பாளர் அம்ரேஷூடன் மூத்த நடிகையும், அம்ரேஷின் அம்மாவுமான ஜெயச்சித்ரா ஆகிய திரைபிரபலங்கள் பலரும் கலந்து கொண்டனர்.
தயாரிப்பாளர் பேசிய போது, ” பாஸ்கர் ஒரு ராஸ்கல், ஒரு நல்ல எண்டர்டெய்னர் மூவியாக உருவாகியுள்ளது. இப்படத்திற்கு அட்வான்ஸ் தொகை வாங்கமலேயே அர்விந்த் சாமி இப்படத்தில் நடித்து கொடுத்தார். இயக்குனர் சித்திக் தமிழ் ரசிகர்களின் ரசனைக்கு ஏற்றவாறு திரைக்கதையில் சில மாற்றங்களை செய்துள்ளார். படம் நன்றாக வந்துள்ளது. இசையமைப்பாளர் அம்ரேஷ் கணேஷ் படத்திற்கு நன்றாக இசையமைத்துள்ளார். பாடல்களும் அருமையாக வந்துள்ளது.” என்று கூறினார்.
நடிகர் அர்விந்த் சாமி, ” இயக்குனர் சித்திக்கிற்கு எனது நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன் இந்த படத்திற்காக என்னை தேர்வு செய்ததற்கு. இந்த படத்தில் ஆக்ஷன் காட்சிகளுக்கு சில ரிஸ்க்குகளை எடுத்துள்ளேன். ஸ்டண்ட் மாஸ்டர் விஜயன் அவர்களின் 500 ஆவது படத்தில் நடித்தது எனக்கு பெருமையாக இருக்கிறது. படத்தில் ரோபோ மற்றும் சூரியின் காமெடி காட்சிகள் அருமையாக வந்துள்ளது, அவர்களுடன் நானும் சேர்ந்து சிறிது காமெடிக்கு முயற்சி செய்துள்ளேன். படம் நன்றாக வந்துள்ளது உங்கள் அனைவருக்கும் கண்டிப்பாக பிடிக்கும் என்று நம்புகிறேன்.” என்று அவர் கூறினார்.
ஜெயச் சித்ரா பேசிய போது, ” அம்ரேஷ் எனது மகன், இப்போது மூன்றாவது முறையாக இந்த பெருமைமிக்க மேடையில் நிற்க செய்துள்ளான். மொட்ட சிவா கெட்ட சிவா படத்தில் இவரது இசை அனைவராலும் பாரட்டப் பட்டது. தற்போது இந்த மேடையில் இருந்த அறிஞர்கள் பலரும் அவரை பாராட்டியுள்ளனர், பெருமையாக உள்ளது. இந்த படம் வெற்றியடைய எனது வாழ்த்துக்கள்” என்று அவர் கூறினார்.
தொழில் நுட்பக்குழு :
இயக்கம் : சித்திக்
இசை : அம்ரேஷ்
ஒளிப்பதிவு : விஜய் உலகநாதன்
எடிட்டிங் : கே.ஆர்.கௌரி சங்கர்
புரொடக்ஷன் டிசைன் : மணி சுசித்ரா
ஆர்ட் : ஜோசப் நெல்லிகன்
சண்டை பயிற்சி : பெப்சி விஜயன்
நடனம் : பிருந்தா
நிர்வாக தயாரிப்பு : விமல்.ஜி
தயாரிப்பு : எம்.ஹர்சினி