என்னங்கடா #அருவி அருவின்னு குதிச்சிக்கிட்டு இருக்கிங்க..??
அப்படி என்ன பெரிய படம் எடுத்து இருக்கானுங்க… என்ற கேள்வி படம் பார்ப்பதற்கு முன் எழுந்தது நிஜம்.. ஆனால்… படம் பார்த்து முடித்தும்…
இதே விரல்கள் அருவி திரைப்படம் தமிழ் சினிமாவின் கவுரவம் என்று எழுதுகின்றேன்..
ஸ்பாய்லர்ஸ் இல்லாத ரிவியூவ்….
நடிகர்கள் பின்னாடி சென்று கோடி கோடியாக கொட்டி படம் எடுத்து ஊத்திக்கொண்டு வருத்தப்படும் தயாரிப்பாளர்கள் அருவி திரைப்படத்தை கண்டுகளிக்க வேண்டும்…
சொல்ல வேண்டிய கதைகள் இந்த மண்ணில் நிறைய இருக்கின்றது..
சொல்வதெல்லாம் சத்தியம் அரங்கில் அருவி எதுடா சமுகம் என்று பேசும் அந்த காட்சியை ஒன்று போதும் இந்த படத்துக்கு..
பொதுவாக ஒரு திரைப்படம் முடிந்த உடன் கைதட்டுவார்கள்.. அல்லது எழுந்து கை தட்டுவார்கள்..
இன்டர்வெல்லில் கை தட்டியது இந்த திரைப்படத்துக்குதான்…
2017 வருட இறுதியில் தமிழ் சினிமாவின் கம்பீரத்தை பறை சாற்ற இரண்டு திரைப்படங்கள் வந்தன.. ஒன்று அறம் மற்றது அருவி…. இரண்டுமே மூன்று எழுத்து டைட்டில்…
வாழ்த்துகள் அருன் புருஷோத்தமன்.
https://www.youtube.com/watch?v=juKMjBtImqE