ஆணவக் கொலைகளையும் அதிகார வர்கத்தையும் அம்பலப்படுத்தும் “ களிறு “

CPS பிலிம்ஸ் மற்றும் அப்பு ஸ்டுடியோஸ் இணைந்து தயாரித்திருக்கும் படம் “ களிறு “

இந்த படத்தில் விஷ்வக் என்ற புதுமுகம் நாயகனாக அறிமுகமாகிறார். நாயகியாக அனுகிருஷ்ணா, தீபா ஜெயன் ஆகியோர் நடிக்கிறார்கள். மற்றும் துரைசுதாகர், நீரஜா, சிவம், ஜீவா, அப்பு, தீப்பெட்டி கணேஷன், காதல் அருண், ஜான், உமாரவி, உமா ரவிச்சந்திரன் ஆகியோர் நடிக்கிறார்கள்.

தயாரிப்பு – விஷ்வக், இனியவன்

ஒளிபதிவு – D.J.பாலா

இசை – N.L.G.சிபி

கலை – மார்டின் டைட்டஸ்

பாடல்கள் – தமிழ் ஆனந்த், பா.முகிலன், ராஜ்சொந்தர்.

ஸ்டன்ட் – S.R.முருகன்

எடிட்டிங் – நிர்மல்

நடனம் – ராதிகா

தயாரிப்பு மேற்பார்வை – G.முருகபூபதி

மக்கள் தொடர்பு – V.K.சுந்தர்.

கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் – G.J.சத்யா

காதலிச்சாலும், கல்யாணம் பண்ணினாலும் ஒரே ஜாதியில் தான் பண்ணவேண்டு இல்லையே கொலை. அப்படி நடக்கிற கொலைகள் தற்கொலைகளாக எப்படி மற்றப் படுகின்றன. அதன் பின்னணியில் இருபவர்கள் யார் என்பதை வெளிச்சம்போட்டுக் காட்டும் படம் தான் “ களிறு

ஆணவக் கொலைகள் காதலுக்காக மட்டும் நடப்பதில்லை. நிறைய பொருளாதார ஆணவக் கொலைகளும் நடக்கின்றன அவை மக்களுக்கு தெரியாமல் மறைக்கப் படுகின்றன.

ஆணவக் கொலை சம்மந்தமான படம் என்பதால் தாழ்த்தப்பட்ட சமூகத்திற்கோ, ஆதிக்க சாதிகளுக்கு எதிராகவோ எடுக்கப் பட்ட படம் இல்லை. எதார்தத்தை மீறாத ஒரு கிராமத்து வாழ்வியலை காட்சிகளின் வழியியே கண் முன் நிறுத்தும் இப்படம்.

கௌரவத்திற்காக கொலை செய்கிறார்கள் அப்படி செய்த பிறகு அவர்கள் கெளரவம் திரும்ப கிடைத்துவிடுகிறதா?

அதிகாரமும், பண பலமும் இருக்கிறதால் தான் இது போன்ற ஆணவக் கொலைகள் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இது மாறனும், மற்றப்படனும். அரசியல் ஆதாயம் தேடும் அரசியல்வாதிகளை அடையாளப்படுத்தி மக்களை விழிப்படைய செய்யவே இப்படம்.

Kaliru Movie Stills (7) Kaliru Movie Stills (18) Kaliru Movie Stills (21) Kaliru Movie Stills (31)