Kovalan Kannagi Tamil Pilot Film Review

கோவலன் கண்ணகி குறும்பட விமர்சனம்..
காதல் மறுக்கப்பட்ட தேசத்தில் காதல் பெரிய விஷயம்தானே.. இந்த குறும்படமும் காதலை மையப்பபடுத்துகின்றது என்றாலும் ஏனைய குறும்படங்கள் போல அமெச்சூர்தனம் இல்லாமல் மேக்கிங்கில் அசத்தி இருக்கின்றார்கள்.

ஒரு காதல் கதையை.. காதலன் அவனுடைய பாயிண்டாஆப் வீயூவில் தன் நண்பனிடமும்.. காதலி அவன் பாயிண்டாஆப் வியூவில் அவள் நண்பியிடமும் கதை சொல்வதில் விரிகின்றது.. இந்த குறும்படத்தின் கதை.. சாரி பைலட் பிலிமின் கதை..

பைலட் பிலிம் என்பது வெப் சீரிஸ் அல்லது டெலிவிஷன் தொடர் எடுக்கும் முன் இப்படியான பைலட் பிலிம்களை அறிமுகப்படுத்துவார்கள் அப்படியான ஒரு பைலட் பிலிம்தான் இந்த கோவலன் கண்ணகி.

அப்பா அம்மா வெளியூர் சென்று இருக்க தன் வீட்டில் காதலனை டிராப் செய்ய சொல்கின்றார்.. காதலி.. போகும் வழியில் தலைவலின்னு சொன்னே இல்லை.. மாத்திரை வாங்கிக்கோ என்று காதலி சொல்கின்றாள்..

காதலன் கண்ணில் மெடிக்கல் ஷாப்பில் நிரோத் சமாச்சாரங்கள் கண்ணில் பட்டாலும் தலைவலி மாத்திரை மட்டும் வாங்கி வருகின்றான்..

வீட்டுக்கு போய்… பெட்ரூமில் அருகருகே உட்கார்ந்து மூட் ஏறி.. மேட்டருக்கு தயாராகும் போது. காதலி ஒரு நிமிஷம் என்கின்றாள்.. காதலன் வீரியத்தை குறைத்து என்ன என்கின்றான்.. பேகில் இருந்து நிரோத்தை எடுத்து போட்டுக்கொ என்கின்றாள்.. நவீன காதலி….

மிரண்டு போய்… ஏன்டி இதை நீ வச்சி இருக்கே என்று கேட்க.. நீ எல்லாம் சோலியை முடிச்சிட்டு ஒருவேளை கழட்டி விட்டுடேன்னு வச்சிக்க.. நான் என்ன உன் கால்ல வந்து விழுந்து கடக்கனும்ன்னு சொல்றியா என்பதில் ஆரம்பிக்கின்றது .. பிரச்சனை…

முத்தம் கொடுக்கும் சீனில் இன்னும் அழுத்தம் இருந்து இருக்கலாம்… இதே போல பெட்ரூம் சினில் தமிழ் சினிமாவில் பார்முலாவில் உடை கொஞ்சமும் கசங்காமல் உடலுறவுக்கு நிரோத் அளவுக்கு முன்னேறுவது தமிழ்குறும்படங்களில் சாத்தியம் இருந்தாலும் இந்த அளவுக்காவது முன்னேறி இருப்பதை கண்டு பெரு மகிழ்ச்சி..
பாரில் நாயகன் தன் காதலை நண்பனிடம் சொல்லும் காட்சிகள்… அவர்களோடு உட்கார்ந்துக்கொண்டு நாமும் கதை கேட்கும் பீலை உண்டாக்குவது.. இயக்குனரின் வெற்றி..

வாட்சன் சக்கரவர்த்திதான் நாயகன் அவரின் உள்ளே ஒரு விரல் வித்தை நடிகர் ஒளிந்து இருக்கின்றார்.. அவரை வெளியே அவ்வப்போது தள்ள வேண்டுமாய் கேட்டுக்கொள்கின்றேன்.
நாயகனின் நண்பனாக அவினாஷ் ரங்கநாதன் நடித்து இருக்கின்றார்.. பாரில் என்ன புன்னகைக்கு இங்க நிறுத்தினே என்ற சத்தமாக கேட்கும் அந்த காட்சியில் நடிப்பில் மிளிர்கின்றார்.

நாயகி அபர்னாவாக சாந்தி ராவ் சிறப்பாக அவருக்கு கொடுக்கப்பட்ட வேலையை சிறப்பாக செய்து இருக்கின்றார்.

படத்தின்பெரிய பலம்.. மோகன் கோவிந்தின் திரைக்கதை மற்றும் உரையாடல்கள். விஷ்னு சுபாஷின் ஒளிப்பதிவு படத்திற்கு ஒரு ரீச் பீலை கொடுக்கின்றத என்பதில் மாற்றுக்கருத்தில்லை.
இந்த திரைப்படத்தை இயக்கிய ஹரிஷ்ஜெயவேலுக்கு சிறப்பான எதிர்காலம் இருக்கின்றது.

வாழ்த்துகள் கோவலன் கண்ணகி டீம்.

https://www.youtube.com/watch?v=RSzwpYtH784

Previous articleThe Silence of the Lambs (1991) Movie Review
Next articleThittam Poattu Thirudura Kootam Poster